விஜய் டிவியில் ரசிகர்களின் பேராதரவுடன் ஒளிப்பரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் 2 சீரியல் கூடிய விரைவில் முடியவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் எப்போதுமே பாகம் 1 , பாகம் 2 என அடுத்தடுத்த அத்தியாயங்களை கொண்ட சீரியல்கள் பல இதுவரை ஒளிப்பரப்பாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளன. அதில் முதலிடத்தில் இருப்பது சரவணன் - மீனாட்சி தொடர். இந்த சீரியலின் வெற்றிக்கு பிறகு மிர்ச்சி செந்தில் கெரியரில் மிகப் பெரிய வெற்றி சீரியல் என்றால் அது நாம் இருவர் நமக்கு இருவர் தொடர் தான். முதல் பாகத்திற்கு கிடைத்த மிகப் பெரிய வரவேற்பு 2ம் பாகத்திற்கும் கிடைத்தது. பலரும் இந்த நெடுந்தொடரை விரும்பி பார்க்கின்றனர். தற்போது ரசிகர்களின் பேராதரவை பெற்ற சீரியல் லிஸ்டில் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரும் உள்ளது.
கமல், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசிலின் மிரட்டலான நடிப்பில் விக்ரம் ட்ரெய்லர் வெளியீடு…
மாயன் தங்கை சரண்யாவுக்கு இப்போது அவரின் காதலனுடன் திருமணம் நடைபெறவுள்ளது. இதுக் குறித்த திரைக்கதை தான் தற்போது பரபரப்பாக ஒளிப்பரப்பாகி வருகிறது. சரண்யாவை ஏமாற்றவே இப்படியொரு கல்யாண நாடகத்தை நடத்துகிறார் அவரின் காதலன். ஆனால் சரண்யாவுக்கு இந்த உண்மை தெரியாது. அதே போல், சரண்யாவின் அத்தை மகன் பாண்டிக்கு, சரண்யாவை கல்யாணம் செய்துக் கொள்ள வேண்டும் என ஆசை. இந்த கல்யாணத்தை எப்படியாவது நிறுத்திவிட வேண்டும் என அவர் நினைக்கிறார். அதே சமயம், சரண்யாவின் காதலன் பற்றிய உண்மை மாயனுக்கு தெரியும்.
அவரும் இதிலிருந்து சரண்யாவை காப்பாற்ற நினைக்கிறார். ஆனால் மாயன் சொன்னால் சரண்யா நம்ப மாட்டார் என்பதால் அமைதியாக இருக்கிறார். இன்றைய எபிசோடில் கூட, சரண்யா தன்னுடைய நிச்சயதார்த்தத்துக்கு மாயன் இருக்க கூடாது என அனைவரின் முன்பு அசிங்கப்படுத்தி மாயனை வெளியே அனுப்புகிறார். இப்படி சீரியல் பல ட்விஸ்டுகளுடன் பயணிக்க, இன்னொரு அதிர்ச்சி தகவலும் தற்போது கிடைத்துள்ளது.
இந்தியாவில் மட்டும் ரூ. 1,000 கோடி வசூலை குவித்த கே.ஜி.எஃப். 2… பல மாநிலங்களில் தொடர்கிறது கலெக்சன்…
விஜய் டிவி, நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலுக்கு என்டு கார்டு போட்டு, புதிய சீரியலை டெலிகாஸ்ட் செய்ய இருப்பதாக சமூகவலைத்தளங்களில் செய்திகள் உலா வருகின்றன. சரண்யாவின் திருமணத்துடன் சீரியலுக்கு சுபம் போட இருப்பதாக கூறப்படுகிறது. அதனால் தான் சீரியலின் திரைக்கதை வேகமாக கொண்டு செல்லப்படுவதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமில்லை இந்த சீரியகுக்கு பதிலாக பாரதி கண்ணம்மா சீரியலை முடிக்கலாம் அது தான் விறுவிறுப்பே இல்லாமல் சென்றுக் கொண்டிருப்பதாக ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். கடைசியாக வெளியான தகவலின் படி சரண்யாவின் கல்யாண எபிசோடு ஷூட்டிங் முடிந்து விட்டது, சரண்யாவுக்கு யாருடன் கல்யாணம் ஆனது என்பது தான் சீரியலில் கடைசி ட்விஸ்ட். பலரும் பாண்டி தான் என கமெண்ட் செய்து வருகின்றனர். அது உண்மையா? இல்லையா ?என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்து விடும்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.