நாம் இருவர் நமக்கு இருவர் 2 சீரியலில் சரண்யாவுக்கு கல்யாணம் முடிந்து விட்டது. இதுக் குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. ஆனால் யாருடன் சரண்யாவுக்கு கல்யாணம் நடந்தது? என்ற கேள்வி தான் ரசிகர்கள் மனதில் ஓடிக் கொண்டிருக்கிறது.
நாம் இருவர் இருவர் நமக்கு இருவர் முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து நாம் இருவர் நமக்கு 2 சீரியல் தொடங்கப்பட்டது. மிர்ச்சி செந்தில் லீட் ரோலில் நடிக்க , அவருடன் மகா என்ற கதாபாத்திரத்தில் ரச்சிதா நடித்து வந்தார். பின்பு அவர் சீர்யலில் இருந்து விலக, தற்போது அரண்மனை கிளி ஜானு நடித்து வருகிறார். முதல் பாகத்தை போலவே இதிலும்
மாறன் மாயன் என 2 ரோலில் செந்தில் நடிப்பில் அசத்தி வருகிறார். 3 தங்கைகளுக்கு அண்ணனாக, நாச்சியாருக்கு நல்ல மகனாக, அதே போல் வில்லன் ரோலில் பூனை கண்ணுடன் மாறன் ரோலிலும் ரசிக்க வைக்கிறார் மிர்ச்சி செந்தில்.
வெள்ளித்திரையில் டானாக உயர்ந்து நிற்கும் சிவகார்த்திகேயன்!
தற்போது மாயன் பிளான் செய்தது போலவே தாமரைக்கும் மாறனுக்கு கல்யாணம் நடந்து விட்டது. ஆனால் மாறன் இன்னும் தாமரையை ஏற்றுக் கொள்லவில்லை. அதே போல், கார்த்திக் - ஐஸ்வர்யாவை வாழ விடாமல் தொடர்ந்து முத்துராசு தொல்லை தந்து வருகிறார். நேற்றைய எபிசோடில் ஐஸ்வர்யாவை கத்தியால் குத்திவிட்டார். தற்போது ஐஸ்வர்யா மருத்துவமனையில் இருக்கிறார்.இதுபுறம் இருக்க, மற்றொரு புறம் சரண்யாவுக்கு அவரின் காதலுடன் திருமண ஏற்பாடுகள் திவீரமாக நடந்து வருகிறது.
ஒரே நாளில் சூர்யவை மாற்றிய வெண்ணிலா.. காற்றுக்கென்ன வேலி சீரியலில் சரியான ட்விஸ்ட்!
இதுக் குறித்த முக்கிய அப்டேட் தான் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது, சரண்யாவின் காதலன் பெண்களை ஏமாற்றும் கெட்டவன். சரண்யாவை ஏமாற்ற தான் இந்த கல்யாண ஏற்படுகளை செய்து இருக்கிறார். இது குடும்பத்தில் இருப்பவர்களுக்கும்
சரண்யாவுக்கும் தெரியாது. இப்படி இருக்கையில், சரண்யாவை ஒருதலையாக காதலிக்கிறார் பாண்டி. அவர் சரண்யாவை எப்படியாவது திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என நினைக்கிறார்.
இப்படி இருக்கையில், தற்போது வெளியாகி இருக்கும் புகைப்படத்தில் சரண்யாவுக்கு கல்யாணம் ஆகி விடுகிறது. கழுத்தில் தாலியுடன் அவர் அமர்ந்து இருக்கிறார். அப்படி என்றால் சரண்யாவுக்கு யாருடன் கல்யாணம், நடந்தது? காதலுடனா? பாண்டியுடனா? என சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால் ரசிகர்கள் கடைசி நேரத்தில் கண்டிப்பாக சரண்யாவின் காதலன் கெட்டவன் என்பது அனைவருக்கும் தெரிந்து இருக்கும். பாண்டி தான் சரண்யா கழுத்தில் தாலி கட்டி இருப்பார் என யூகித்துள்ளனர். ஆனால் உன்மையில் என்ன நடந்தது? என்பது சீரியல் டெலிகாஸ்ட் ஆன பிறகே அனவருக்கும் தெரிய வரும்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.