Home /News /entertainment /

கூட்டத்தில் ஒருவனாக நிற்க வாய்ப்பு தேடிய காலம்... ’நாம் இருவர் நமக்கு இருவர்’ கத்தியின் கெரியர் லைஃப்!

கூட்டத்தில் ஒருவனாக நிற்க வாய்ப்பு தேடிய காலம்... ’நாம் இருவர் நமக்கு இருவர்’ கத்தியின் கெரியர் லைஃப்!

நாம் இருவர் நமக்கு இருவர் கத்தி

நாம் இருவர் நமக்கு இருவர் கத்தி

நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அவருக்கு பக்க பலமாக இருந்துள்ளனர்.

  விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் கத்தி என்ற கதிரேசன் ரோலில் நடிக்கும் ராஜூ ஜெயமோகன் பற்றி பலரும் அறிந்திடாத தகவல்கள்.

  விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் ஹிட் சீரியல் லிஸ்டில் இருக்கும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் கத்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருப்பவர் நடிகர் ராஜூ ஜெயமோகன். இந்த சீரியலில் இவருக்கும் காயத்ரிக்குமான ரொமான்ஸ் சீன்களுக்கு ஏகப்பட்ட ஃபேன்ஸ்கள் உண்டு. இதுவரை பல சீரியல்களில், ஒருசில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கத்தி ரோல் ராஜூக்கு பெரிய ரீச்சை வாங்கி தந்துள்ளது. முக்கியமாக இந்த சீரியலில் அவரின் பேச்சு பெரும்பாலான ரசிகர்களை கவர்ந்துள்ளது.

  இவரின் சொந்த ஊர் திருநெல்வேலி. பிஎஸ்சி விஷ்வல் கம்யூனிகேஷன் படித்து முடித்துவிட்டு நிறைய ஆசைகள் கனவுகளுடன் சினிமாவுக்கு வந்தார். இயக்குநரும் நடிகருமான பாக்கியராஜிடம் உதவி இயக்குனராகவும் சில காலம் பணியாற்றினார். அதன் பின்பு தான் விஜய் டிவியில் கனா காணும் காலங்கள் தொடரின் கல்லூரி சாலை சீசனில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை நழுவ விடாமல் சீரியலில் நடித்தார். அதில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, சரவணன் மீனாட்சி தொடரில் நடித்தார். வேட்டையன் ரோலில் கவின் நடிக்க அவரின் நண்பராக ராஜூ நடித்தார். இந்த தொடரின் மூலம் இவர்களின் நட்பு நெருக்கமானது. ஆண்டாள் அழகர் சீரியலிலும் பாலாவுடன் சேர்ந்து நடித்து சின்னத்திரையில் ரசிக்கும் முகமாக மாறினார்.

  மனைவியுடன் கதிரேசன்

  அதன் பின்பு தான் கவின் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றுவிட்டு வந்து நட்புனா என்னனு தெரியுமா என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார். இந்த படத்தில் தன் நண்பனை மறவாத கவின் ராஜூவையும் லீட் ரோலில் நடிக்க வைத்தார். ஆனாலும் வெள்ளிதிரையில் போதிய வரவேற்பு கிடைக்காததால் மீண்டும் சின்னத்திரை பக்கமே வந்தார் ராஜூ. அப்போது தான் பாரதி கண்ணம்மா சீரியலில் வருண் ரோல் கிடைத்தது. அதனைத்தொடர்ந்து இப்போது நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மாயன் நண்பராக கத்தி ரோலில் கலக்குகிறார்.

  திருநெல்வேலி டூ சென்னை பயணம்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்காக ஐஸ்வர்யா எடுத்த ரிஸ்க்!

  இந்த சீரியல் மூலம் இவருக்கு பெண் ரசிகைகள் அதிகரித்துள்ளனர். கூட்டத்தில் ஒருவனாக நிற்க ராஜூ வாய்ப்பு தேடி அலைந்த காலமும் உண்டு. நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அவருக்கு பக்க பலமாக இருந்துள்ளனர். பல போராட்டங்களுக்கு பிறகே ராஜூ சின்னத்திரையில் இந்த இடத்தைப் பிடித்துள்ளார். அதுமட்டுமில்லை ஜெயித்த பின்னரே திருமணம் செய்துகொண்டார். இவரது திருமணம் காதல் திருமணம் ஆகும். கல்லூரி படிக்கும் போதே காதலித்து வந்தவர் நல்ல நிலைமையை அடைந்ததும் காதலியை மணந்தார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Sreeja Sreeja
  First published:

  Tags: Vijay tv

  அடுத்த செய்தி