ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வீட்டுக்கு வந்த புது வரவு.. மகிழ்ச்சியில் மைனா நந்தினி - யோகேஷ்!

வீட்டுக்கு வந்த புது வரவு.. மகிழ்ச்சியில் மைனா நந்தினி - யோகேஷ்!

மைனா நந்தினி - யோகேஷ்

மைனா நந்தினி - யோகேஷ்

நந்தினி - யோகேஷ் வாழ்க்கையில் மற்றொரு நல்ல விஷயம் நடந்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

சின்னத்திரை, வெள்ளித்திரை பிரபலம் மைனா நந்தினி புதியதாக கார் வாங்கியுள்ளார். இந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் மிகுந்த சந்தோஷத்துடன் மைனா ஷேர் செய்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ’சரவணன் மீனாட்சி’ சீரியல் மூலம் சின்னத்திரையில் அனைவரும் அறியப்படும் முகமாக மாறியவர் மைனா நந்தினி. இந்த சீரியல் மூலம் தான் அவருக்கு மைனா என்ற அடைமொழி கிடைத்தது. அதன் பின்பு பல சீரியல்களில் நடித்தார். விஜய் டிவியில்  சில ரியாலிட்டி நிகழ்ச்சிகளையும்  தொகுத்து வழங்கினார். இடை இடையில் வெள்ளித்திரையில் கவனத்தை திருப்பியவர் வம்சம், ரோமியோ ஜூலியட், கேடி பில்லா கில்லாடி ரங்கா, அரண்மனை 3 போன்ற படங்களில் நடித்தார். சமீபத்தில் வெளியான சூப்பர் டூப்பர் ஹிட் படமான விக்ரம் படத்திலும் மைனா , விஜய் சேதுபதியின் மனைவியாக நடித்து இருந்தார்.  சின்னத்திரையில்  மட்டுமில்லை வெள்ளித்திரையிலும் இப்போது மைனா ரொம்ப பிஸி.

எதிர் நீச்சல் சீரியலில் அந்த நடிகை விலகவில்லை.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி!

சில ஆண்டுகளுக்கு முன்பு மைனா நந்தினி சீரியல் நடிகர் யோகேஷ்வரன் என்பரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஜீ தமிழின் சத்யா சீரியல் மூலம் பிரபலமானவர் யோகேஷ்வரன். இந்த தம்பதிக்கு  துருவன் எனும் 2  வயது மகன் இருக்கிறார்.நந்தினி நடிப்பில் பிஸியாக இருக்க, யோகி டான்ஸ் ஷோ மற்றும் யூடியூப் சேனலில் பிஸியாக இருக்கிறார். கடின உழைப்புக்கு பின்பு இந்த ஜோடி தங்களது கெரியர் மற்றும் பெர்சனல் லைஃபில் வளர்ச்சியை பார்த்து வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு தான் அபார்ட்மெண்டில் இருந்து தனி வீட்டுக்கு வந்தனர். அதே போல் சமீபத்தில் மாலத்தீவுக்கு சுற்றுலாவும் சென்று வந்தனர்.

கோபி - ராதிகா உறவு பற்றி தெரிய வந்த உண்மை.. கதறி துடிக்கும் பாக்கியா!

அதே போல் மைனா நந்தினி இன்ஸ்டா பக்கத்தில் 7 மில்லியன் ஃபாலோவர்ஸ்களை பெற்றுள்ளார். இந்த தகவலும் இணையத்தில் வைரலானது. இதுப்போக நந்தினி - யோகேஷ் வாழ்க்கையில் மற்றொரு நல்ல விஷயம் நடந்துள்ளது. அதாவது இந்த ஜோடி 2 தினங்களுக்கு முன்பு சொந்தமாக புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளனர்.
 
View this post on Instagram

 

A post shared by Nandhini Myna (@myna_nandhu)கார் வாங்கிய படத்தை நந்தினி தனது இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார். அந்த படத்தில் மாலையுடன் புது கார் நிற்க, அந்த சந்தோஷத்தில் கணவர் யோகேஷூக்கு கன்னத்தில் முத்தம் தருகிறார் மைனா. புதியதாக கார் வாங்கிய மைனாவுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். விஜய் டிவி பிரபலங்கள் தொடர்ந்து புது கார் வாங்குவது அனைவரும் அறிந்த ஒன்று. அந்த லிஸ்டில் இப்போது மைனாவும் இணைந்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Television, TV Serial, Vijay tv