Home /News /entertainment /

அட மைனா நந்தினியா இது! - பிங்க் நிறத்தில் மாறியது எப்படி?

அட மைனா நந்தினியா இது! - பிங்க் நிறத்தில் மாறியது எப்படி?

மைனா நந்தினி

மைனா நந்தினி

நந்தினி அண்மையில்  `அட்ராங்கி ரே’ படத்தின் `சக்க சக்களத்தி’ பாடலுக்கு நடனமாடி ரீல்ஸ் வெளியிட்டிருந்தார். நந்தினி தன் போட்டோ, வீடியோக்களுக்கு அதிகப்படியான ஃபேஸ் ஃபில்டர் பயன்படுத்துவார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் மைனா நந்தினி. தொடர்ந்து குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வரும் நந்தினி தற்போது வெள்ளித்திரையில் பிஸியாகிவிட்டார்.


நந்தினிக்கு குழந்தை பிறந்த நேரமா தெரியவில்லை, வெள்ளித்திரை சின்னத்திரை என்று பிஸியாகிவிட்டார். பட வாய்ப்புகள் குவிகின்றன. முன்னணி நடிகர்களின் பெரிய பேனர் படங்களில் நடித்து வருகிறார். பெரிய கேரக்டர் இல்லையென்றாலும், குறிப்பிடும் அளவுக்கு நல்ல ரோலில் நடித்து வருகிறார்.


நந்தினி-யோகேஷ்வரன் இணைந்து கலந்து கொண்ட மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சி அண்மையில் நிறைவுக்கு வந்தது. தற்போது புது நிகழ்ச்சி ஒன்றில் தொகுப்பாளினியாக கமிட் ஆகியிருக்கிறார் நந்தினி. சின்னத்திரை, வெள்ளித்திரை, யூ டியூப் என படு பிஸியாக இயங்கி வரும் நந்தினி, அவ்வபோது இன்ஸ்டாவில் ஜாலியாக ரீல்ஸ் வெளியிட்டு வருகிறார்.


மைனாவாக அறிமுகமான நந்தினி ஆரம்பத்தில் மாநிறமாக இருப்பார். ஆனால் தற்போது ஸ்கின் டோனில் பயங்கர மாற்றம். எப்படிங்க இவ்ளோ கலர் ஆனீங்க என்று கேட்பவர்களுக்கு நந்தினி சொல்லும் டிப்ஸ் எபிசி ஜூஸ். இது ரெகுலரா குடிச்சா கலர் ஆகிடலாம் என்கிறார்!






 




View this post on Instagram





 

A post shared by Nandhini Myna (@myna_nandhu)





அழகுக்கு நிறம் முக்கியமில்லை. ஆனால் இன்றைய காலகட்டத்தில் சீரியல், சினிமா என அனைத்திலும் வேற்று மாநில நாயகிகளை களமிறக்குகிறார்கள். நந்தினி போன்ற ஒருசிலர் தான் இந்த துறையில் தங்களுக்கென ஒரு இடத்தை தக்க வைத்துள்ளனர். ஆனால் நந்தினி இதுவரை லீட் கேரக்டரில் நடிக்காதது சின்ன வருத்தம் தான்!


இதையும் படிங்க..  மனைவியுடன் மிட் நைட் பைக் ரைட்! - ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்வாரஸ்ய பக்கங்கள் 


நந்தினி அண்மையில்  `அட்ராங்கி ரே’ படத்தின் `சக்க சக்களத்தி’ பாடலுக்கு நடனமாடி ரீல்ஸ் வெளியிட்டிருந்தார். நந்தினி தன் போட்டோ, வீடியோக்களுக்கு அதிகப்படியான ஃபேஸ் ஃபில்டர் பயன்படுத்துவார். இம்முறை கொஞ்சம் அதிகமாகவே பயன்படுத்தி விட்டார் போலும். நந்தினியின் முகம் வெளிநாட்டு பெண்ணை போல பிங்க் நிறத்தில் தெரிகிறது. இதனால் ரசிகர்கள் அவரை கலாய்த்து வருகின்றனர்.


மற்றொரு புறம் கார்த்தியின் விருமன் பட ஷூட்டிங்கிலும் பிஸியாக இருக்கிறார் நந்தினி. கமலின் விக்ரம் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்!




உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Aswini S
First published:

Tags: Bigg Boss Tamil 5, Celebrities, Nandhini, TV Serial

அடுத்த செய்தி