Home /News /entertainment /

7 மில்லியன் என்றால் சும்மாவா.. செம்ம ஹாப்பியில் விஜய் டிவி மைனா நந்தினி!

7 மில்லியன் என்றால் சும்மாவா.. செம்ம ஹாப்பியில் விஜய் டிவி மைனா நந்தினி!

மைனா நந்தினி

மைனா நந்தினி

மைனா நந்தினியின் இன்ஸ்டா பக்கத்தை 7 மில்லியன் ஃபாலோவர்ஸ் பின் தொடர்கின்றனர்.

    சின்னத்திரை டூ வெள்ளித்திரை செலபிரிட்டியாக மாறி இருக்கும் விஜய் டிவி மைனா நந்தினி இன்ஸ்டாகிராமில் 7 மில்லியன் ஃபாலோவர்ஸ்களை அடைந்து இருக்கிறார். அவருக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

    விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி’ சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் மைனா நந்தினி. சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தவர் தற்போது விஜய் டிவியின் முக்கிய டிவி ஷோக்களையும் தொகுத்து வழங்கி வருகிறார்.எளிமையான தமிழ், பக்கத்து வீட்டு பெண் போன்ற தோற்றம் நந்தினியை ரசிகர்களிடம் நெருக்கம் ஆக்கியது. அதன் பின்பு திரைப்படங்களில்
    குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்தது. வாய்ப்பை மிக சரியாக பயன்படுத்திக் கொண்டர்.  சமீபத்தில் வெளியான ’விக்ரம் ’படம் வரை பிரபலமாகி விட்டார்.

    என்னுடைய 19 வயதில் இது நடக்கும் என நினைக்கவில்லை.. யாஷிகா போட்ட பதிவு!

    இதற்கு முன்பு வெளியான ’அரண்மனை’ 3 படத்தில் விவேக்கின் ஜோடியாகவும் மைனா நடித்து இருந்தார். இவரின் இந்த அசூர வளர்ச்சி பலரையும் வியப்படைய வைத்துள்ளது. ஆனால் அதற்காக தனது கடின உழைப்பையும் மைனா நந்தினி கொடுத்துள்ளார் என்பதே உண்மை. இடையில் முன்னாள் கணவரின் இறப்பால் பல ட்ரோல்களை சந்தித்த மைனா யோகேஷின் துணையால் தற்போது எல்லாவற்றையும் கடந்து ஜெயித்துக் கொண்டிருக்கிறார்.

    பாக்கியலட்சுமியில் கோபிக்கு நடந்த அசிங்கம்.. எல்லோருக்கும் உண்மை தெரிய வருமா?

    சீரியல் நடிகர் யோகேஷ்வரன் என்பரை இவர்  காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஜீ தமிழின் சத்யா சீரியல் மூலம் பிரபலமானவர் யோகேஷ்வரன். நந்தினி-யோகி தம்பதிக்கு துருவன் எனும் ஒரு வயது மகன் இருக்கிறார். கொரோனா லாக்டவுனில் இந்த தம்பதியினர் யூடியூப் சேனல் தொடங்கினர் அதுவும் ஹிட் அடிக்க, யோகி-நந்தினி சேனலுக்கு ரசிகர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகின்றனர்.



    இந்நிலையில் மைனா நந்தினியின் இன்ஸ்டா பக்கத்தை 7 மில்லியன் ஃபாலோவர்ஸ் பின் தொடர்கின்றனர். இந்த விஷயத்தை மிகுந்த மகிழ்ச்சியுடன் மைனா ஸ்டேட்டஸாக ஷேர் செய்துள்ளார். அவருக்கு பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை பரிமாறி வருகின்றனர். இன்ஸ்டாவில் 7 மில்லியன் என்பது அவ்வளவு சாதாரண விஷயமல்ல. பெரிய பெரிய வெள்ளித்திரை பிரபலங்கள் கூட 5 மில்லியன் ஃபாலோவர்ஸ்களை மட்டுமே கடந்திருக்கும் நிலையில் மைனா இவ்வளவு குறுகிய காலத்தில் 7 மில்லியனை அடைந்திருப்பது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி