ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

விக்ரம் படத்தில் இருக்கும் 3 சின்னத்திரை பிரபலங்கள்.. இன்னும் நிறைய சர்ப்பிரைஸ் இருக்கு!

விக்ரம் படத்தில் இருக்கும் 3 சின்னத்திரை பிரபலங்கள்.. இன்னும் நிறைய சர்ப்பிரைஸ் இருக்கு!

விக்ரம் படம்

விக்ரம் படம்

சின்னத்திரையில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை சம்பாதிக்கும் வைத்திருக்கும் இந்த 3 நடிகைகள் தான் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியுடன் ஸ்கீரினை ஷேர் செய்து இருக்கிறார்கள்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  விக்ரம் படத்தில் 3 சின்னத்திரை பிரபலங்கள் நடித்து இருக்கிறார்கள். அதுவும் அவர்கள் விஜய் சேதுபதியிடன் தங்களது ஸ்கீரினை ஷேர் செய்து இருக்கிறார்கள். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

  பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விக்ரம் திரைப்படம் இன்று வெளியாகி பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. கிட்டத்தட்ட 4 வருடங்களுக்கு பிறகு கமலின் திரைப்படம் வெள்ளித்திரையில் வெளிவந்து இருப்பது அவரின் ரசிகர்களை மிகுந்த சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது. சென்னையில் உள்ள முன்னணி தியேட்டர்களில் படத்தை பார்க்க கூட்டம் அலைமோதுகிறது. பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் படத்தை பார்த்து தங்களது அனுபவத்தை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் விக்ரம் படத்தில் 3 சின்னத்திரை நடிகைகள் விஜய் சேதுபதியுடன் ஸ்கீரினை ஷேர் செய்துள்ளனர்.

  Vikram Review: கமல்ஹாசனின் விக்ரம் படம் எப்படி இருக்கு? ட்விட்டர் விமர்சனம்!

  இதுக் குறித்த விவரம் தற்போது வெளியாகியுள்ளது. விஜய் டிவி சீரியல் மூலம் அறிமுகமானவர் தான் மைனா நந்தினி. ரியாலிட்டி ஷோக்களில் கலக்கி கொண்டிருந்தவர் வெள்ளித்திரையில் துணை நடிகையாகவும் நடிக்க தொடங்கினார். நந்தினியின் வட்டார மொழி, இயல்பான தோற்றம் ரசிகர்களை கவர அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆனார். சமீபத்தில் வெளியான அரண்மனை 3 படத்திலும் நந்தினி விவேக்குக்கு ஜோடியாக நடித்து இருந்தார். அதே போல், இன்ஸ்டாவில் தனது கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கட்டிப்போடவர் 4 மணி ஷிவானி.

  இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் தான் சின்னத்திரையில் வாய்ப்பு கிடைத்தது. பின்பு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றார். தற்போது ஆர். ஜே பாலாஜி படத்திலும் வடிவேலு படத்தில் அவருக்கும் ஜோடியாகவும் நடித்து வருகிறார். ஆங்கராக தனது பயணத்தை தொடங்கிய விஜே மகேஸ்வரி சென்னை 28 2, பானா காத்தாடி போன்ற படங்களிலும் நடித்து இருக்கிறார். சின்னத்திரையில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை சம்பாதிக்கும் வைத்திருக்கும் இந்த 3 நடிகைகள் தான் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியுடன் ஸ்கீரினை ஷேர் செய்து இருக்கிறார்கள்.

  விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி சோஃபா மீது உட்கார்ந்து இருக்க, அவரின் அருகில் இந்த 3 நடிகைகளும் அமர்ந்து இருக்கிறார்கள். படத்தில் இடம்பெறும் இந்த காட்சியை ரசிகர்கள் சிலர் இன்ஸ்டாவில் பகிர்ந்து மைனா நந்தினி, மகேஸ்வரி, ஷிவானி ஆகியோரை டேக் செய்து வாழ்த்தியுள்ளனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: Vijay sethupathi, Vijay tv, Vikram