சின்னத்திரை டூ வெள்ளித்திரைக்கு பறந்து இருக்கும் விஜய் டிவி புகழ் மைனா நந்தினியை அவரின் கணவர் யோகேஷ் நடு கடலில் அழ வைத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சின்னத்திரையில் சிலர் என்னதான் கொடி கட்டி பறந்தாலும் வெள்ளித்திரைக்கு சென்ற பின்னர் அவர்கள் ஜொலிக்காமல் போய்விடுகிறார்கள். சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்களில் வொர்க்கவுட் ஆகும் லக், சிலருக்கு வெள்ளித்திரையில் கைக்கொடுக்காமல் போய் விடுகிறது. ஆனால் மைனா நந்தினிக்கு அப்படி நடக்கவில்லை. சின்னத்திரையில் மிகப் பெரிய அளவில் பெயரும் புகழும் சம்பாதித்தவர் தற்போது வெள்ளித்திரையிலும் துணை நடிகை ரோலில் கலக்கி கொண்டிருக்கிறார். நம்ம வீட்டு பிள்ளை, அரண்மனை 3 தற்போது கமலின் விக்ரம் படத்திலும் மைனா நடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க.. சிம்பு விஷயத்தில் சீரியல் நடிகையை திட்டிய காஜல் பசுபதி! ஷாக்கான ரசிகர்கள்
மைனா நந்தினி போல் அவரின் கணவர் யோகேஷூம் சினி வட்டாரத்தில் பிரபலமானவர். ஜீ தமிழின் சத்யா சீரியல் மூலம் அறிமுகம் ஆன யோகேஷ்வரன் நாயகி, வைதேகி காத்திருந்தாள் போன்ற தொடர்களில் நடித்து இருக்கிறார். இவர் மிகச் சிறந்த டான்சரும் கூட. இவர்களின் திருமணம் காதல் திருமணம் ஆகும். லாக்டவுனில் யூடியூப் சேனல் தொடங்கி பிரபலங்களில் யோகி - நந்தினியும் ஒருவர். ’மைனா விங்க்ஸ்’ என்ற இவர்களின் சேனலுக்கு ரசிகர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகின்றனர்.
இதையும் படிங்க..தொடங்குகிறது பிக் பாஸ் சீசன் 6.. ஆங்கர் யார் தெரியுமா?
இதில் தொடர்ந்து இருவரும் பல வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அப்படி சமீபத்தில் வெளியான வீடியோ தான் யூடியூப்பில் பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது. அதாவது, நந்தினி பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு யோகி, அவரையும் நந்தினி தம்பி பாலாவையும் மாலத்தீவுக்கு அழைத்து சென்று இருக்கிறார். முதலில் நந்தினியிடம் கோவா செல்வதாக தான் யோகி சொல்லி இருக்கிறார் ஏர்போர்ட் சென்ற பிறகு தான் செல்ல போவது மாலத்தீவுக்கு என்பது நந்தினிக்கு தெரிய வருகிறது. உற்சாகத்தில் கத்துகிறார்.
அதுமட்டுமில்லை அங்கு சென்ற பின்பு, நடு கடலுக்கு நந்தினியை அழைத்து சென்று பிறந்த நாள் சர்ப்பிரைஸூம் செய்கிறார் யோகி. இதை எதிர்பார்க்காத மைனா ஆனந்த கண்ணீரில் அழுது தீர்க்கிறார். இந்த லவ் மொமண்டுகள் அனைத்தும் மைனா விங்க்ஸ் யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் இடம்பெற்றுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.