• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • மைனா நந்தினி கணவர் யோகேஷின் புதிய அவதாரம்.. ரசிகர்கள் ஷாக்!

மைனா நந்தினி கணவர் யோகேஷின் புதிய அவதாரம்.. ரசிகர்கள் ஷாக்!

மைனா நந்தினி யோகேஷ்

மைனா நந்தினி யோகேஷ்

அச்சு அசல் பெண் போலவே இருக்கும் யோகேஷ், மைனாவை விட அழகாக இருப்பதாக கமெண்டுகள் தெறிக்கின்றன.

  • Share this:
    மைனா நந்தினி யோகேஷின் புதிய அவதாரம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    விஜய் தொலைக்கட்சியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ தொடரில் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை மைனா நந்தினி. பல்வேறு படங்களில் நடித்துள்ள மைனா சிவகார்த்தியேகன் நடிப்பில் வெளியாகி இருந்த நம்ம வீட்டு பிள்ளை படத்திலும் நடித்திருந்தார். மைனாவின் வட்டார மொழி பேச்சு ரசிகர்களை பெரிதும் கவர்ந்த ஒன்று. இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு மைனாவின் கணவர் தற்கொலை செய்து கொண்டார். இதில் மைனாவின் பெயர் மிகப் பெரிய அளவில் டேமேஜ் ஆனது. இருந்தும் மனம் களங்காத அவர் தொடர்ந்து சினிமா, ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு வந்தார்.

    இந்நிலையில் தான் மைனா, சீரியல் நடிகரும் நடன இயக்குனராகவும் இருந்து வரும் யோகேஷ்வரன் என்பவரை 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். நடிகர் யோகேஷ்  ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சத்யா, நாயகி போன்ற சீரியல்களில் நடித்த புகழ் பெற்றவர். இவர்களின் திருமணம் அனைவரின் ஆசியுடன் பிரம்மாண்டமாக நடைப்பெற்றது.
    அதன் தொடர்ச்சியாக . கடந்த ஆண்டு இந்த ஜோடிக்கு ஒரு அழகான ஆண் குழந்தையும் பிறந்தது. தற்போது இவர்கள் இருவரும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் Mr & Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்துகொண்டுள்ளனர்.

    பட்டிமன்றம் டாஸ்கில் பற்றி எரியும் பிக் பாஸ் வீடு.. கோபத்தின் உச்சத்தில் தாமரை!

    இந்த நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் இவர்களுக்கு ஃபேன்ஸ் பட்டாளம் அதிகரித்துள்ளது. மைனாவின் யூடியூப் சேனலில் தொடர்ந்து ஃபாலோஃபர்ஸ் அதிகரித்து வருகின்றனர். இந்த Mr & Mrs சின்னத்திரை ஷோவில் இதுவரை மைனாவும் யோகேஷும் பல விஷயங்களை வெளிப்படையாக பகிர்ந்து இருக்கின்றனர். காதலர் தின பரிசாக யோகேஷ் மைனாவின் படத்தை நெஞ்சில் பச்சை குத்தி அனைவரையும் ஆனந்த கண்ணீரில் நனய வைத்தார். அதே போல், இவர்களின் செல்ல பிள்ளை துருவனையும் ஒரு முறை மேடை ஏற்றினர். இப்படி Mr & Mrs ஷோவில் பல சுவாரசியமான நிகழ்வுகள் அரங்கேறியுள்ளன.



    அந்த வகையில், Mr & Mrs நிகழ்ச்சியின் புரமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் யோகேஷ் பெண் வேடமிட்டு நடனம் ஆடுகின்றார். அச்சு அசல் பெண் போலவே இருக்கும் யோகேஷ் மைனாவை விட அழகாக இருப்பதாக கமெண்டுகள் தெறிக்கின்றன. அவன் - இவன் படத்தில் விஷால் ஆடிய அதே நடனத்தை மேடையில் ஆடி ஒட்டு மொத்த அரங்கத்தையும் அதிர வைக்கிறார் யோகேஷ்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: