கமல் - லோகேஷ் கனகராஜின் ‘விக்ரம்’ படத்தில் இன்னுமொரு விஜய் டிவி பிரபலம்!

கமல் ஹாசன்

லோகேஷ் கனகராஜுடன் தான் எடுத்துக் கொண்ட படத்தை பகிர்ந்த மைனா நந்தினி, "உங்களுடன் பணிபுரிவதில் மகிழ்ச்சி” எனக் குறிப்பிட்டுள்ளார்.

 • Share this:
  கமலின் விக்ரம் படத்தில் நடிப்பதை விஜய் டிவி மைனா நந்தினி உறுதிப்படுத்தியுள்ளார்.

  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் 'விக்ரம்' படத்தின் படப்பிடிப்பு, கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் கமல்ஹாசனுடன் இணைந்து விஜய் சேதுபதி மற்றும் ஃபஹத் ஃபாசில் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

  விக்ரம் படத்தைப் பற்றிய புதிய தகவல்கள் தினம்தோறும் வெளியாகும் நிலையில், படம் குறித்த எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் விக்ரம் படத்தில் விஜய் டிவி பிரபலம், மைனா நந்தினி தான் விக்ரம் படத்தில் நடிப்பதை உறுதிப்படுத்தியிருக்கிறார்.

  லோகேஷ் கனகராஜுடன் தான் எடுத்துக் கொண்ட படத்தை பகிர்ந்த மைனா நந்தினி, "உங்களுடன் பணிபுரிவதில் மகிழ்ச்சி” எனக் குறிப்பிட்டுள்ளார். சுவாரஸ்யமாக இந்தப் படத்தில் நந்தினி நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  கமல்ஹாசனின் 'விக்ரம்' திரைப்படத்தில் ஏற்கனவே அர்ஜுன் தாஸ், நரேன் மற்றும் காளிதாஸ் ஜெயராம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். ஆண்ட்ரியா ஜெரேமியாவும் இதில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பிக் பாஸ் ஷிவானி நாராயணன் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிப்பதாகக் கூறப்படுகிறது.   
  View this post on Instagram

   

  A post shared by Nandhini Myna (@myna_nandhu)


  Myna Nandhini confirms that being part of Kamal Haasan and Lokesh Kanagaraj Vikram, Myna Nandhini, Yogeshwaran, Myna Nandhini Yogeshwaran, Myna Nandhini Yogeshwaran images, Myna Nandhini Yogeshwaran latest photos, serial actress Myna Nandhini Yogeshwaran, மைனா நந்தினி, யோகேஸ்வரன், மைனா நந்தினி யோகேஸ்வரன், மைனா நந்தினி யோகேஸ்வரன், kamal haasan vikram movie, kamal haasan lokesh kanagaraj, myna nandhini in vikram movie
  நந்தினி - லோகேஷ் கனகராஜ்


  ஆக்‌ஷன் த்ரில்லரான 'விக்ரம்' படத்தை லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்க, அனிருத் ரவிச்சந்தர் இசையமைப்பது குறிப்பிடத்தக்கது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: