ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சீரியலுக்கு வந்த ரஜினி பட நடிகை..செம்ம மாஸான கதாபாத்திரம் என தகவல்!

சீரியலுக்கு வந்த ரஜினி பட நடிகை..செம்ம மாஸான கதாபாத்திரம் என தகவல்!

நடிகை விசித்ரா

நடிகை விசித்ரா

கிட்டத்தட்ட 18 வருடங்களுக்குப் பிறகு கடந்த 2019 ஆம் ஆண்டு சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார் நடிகை விசித்ரா.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  முத்து பட நடிகை விசித்ரா மீண்டும் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ளார். இதுக் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

  90' கிட்ஸுக்களுக்கு கண்டிப்பாக விசித்ரா யார் என்பது தெரிந்து இருக்கும். 90-களில் வந்த பல்வேறு ஹிட் திரைப்படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார். குறிப்பாக, வடிவேலு, கவுண்டமணி, செந்தில் ஆகியோருக்கு கோவை சரளாவுக்கு பின்பு விசித்ரா தான் சரியான ஜோடி. கிட்டத்தட்ட 18 வருடங்களுக்குப் பிறகு கடந்த 2019 ஆம் ஆண்டு சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார் நடிகை விசித்ரா. சன் டிவியில் ஒளிப்பரப்பான ராசாத்தி என்ற சீரியலில் நடிகை தேவயானி, விஜயகுமார், செந்தில் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து இருந்தனர்.

  அப்பா இருக்காரு.. வசதியான வீட்டு பொண்ணு தான்! அப்ப தனலட்சுமி பிக் பாஸில் சொன்னது எல்லாமே பொய்யா?

  அந்த சீரியலில் வில்லி ரோலில் விசித்ரா என்ட்ரி கொடுத்தார். சீரியலுக்கும் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. ஆனால் பாதியிலே அந்த சீரியல் முடிக்கப்பட்டது. சிலர் நடிகர், நடிகைகளும் மாற்றப்பட்டனர். அந்த சீரியலுக்கு பிறகு இப்போது மீண்டும் விசித்ரா புதிய சீரியலில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
   
  View this post on Instagram

   

  A post shared by Tamil Serials (@tamilserialexpress)  ஜீ தமிழில் கூடிய விரைவில் ஒளிப்பரப்பாகவுள்ள கார்த்திகை தீபம் என்ற சீரியலில் செம்பருத்தில் புகழ் கார்த்தி ராஜ் லீட் ரோலில் நடிக்கிறார். இந்த சீரியல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கெனவே வெளியாகி இருந்தது. இந்நிலையில் இந்த சீரியலில் கார்த்திக் ராஜூக்கு அம்மா ரோலில் விசித்ரா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. செம்பருத்தி சீரியலில் அகிலாண்டேஸ்வரி ரோல் போல் இதிலும் செம்ம மாஸான அம்மா ரோலை இயக்குனர் வடிவமைத்துள்ளாராம். அதில் தான் விசித்ரா நடிக்க இருப்பதாக செய்திகள் இணையத்தில் உலா வருகின்றன.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: TV Serial, Zee tamil