விஜய் டிவி முத்தழகு சீரியலில் முத்தழகுக்கு மட்டுமில்லை சீரியல் ரசிகர்களுக்கும் பூமி மிகப் பெரிய அதிர்ச்சியை தந்திருக்கிறார். இதுக் குறித்த புரமோ தற்போது வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் சீரியல்களில் முத்தழகு சீரியல் பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது. இந்த சீரியல் டெலிகாஸ்ட் தொடங்கிய நாளிலிருந்து பாசிடிவ் நெகடிவ் என கலவையான விமர்சங்களை பெற்று வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் தினமும் மதியம் 3.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில் கதையின் நாயகன் பூமி நாதனாக, ஆஷிஷ் சக்கரவர்த்தியும், நாயகி முத்தழகாக ஷோபனாவும் நடித்து வருகின்றனர்.விவசாயம் செய்து கஷ்டப்படும் தைரியமான கிராமத்துப் பெண், பணக்கார ஹீரோ, என்ற கதைக்களத்தை அடிப்படையாக கொண்டு சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.
பெட்ரமாக்ஸ் லைட்டேதான் வேணுமா..! தமிழ் சினிமாவின் கலாய் மன்னன் கவுண்டமணியும் கவுன்டர்களும்
முத்தழகுக்கு பூமிநாதன் உடன் விருப்பமில்லாத திருமணம் நடந்து விட்டது. இதில் பூமி நாதன் ஃபாரினில் படித்து வளர்ந்த பிள்ளை. அம்மாவின் சொல்லுக்கு கட்டுப்பட்டு முத்தழகுக்கு தாலி கட்டுகிறார். முத்தழகு அப்படியில்லை கிராமத்தில் வளர்ந்து சிலம்பாட்டம், கம்பு சுத்துவது, என அனைத்தும் அவருக்கு அத்துப்பிடி. இப்படி இருவருக்கும் எந்த விதத்திலும் ஒத்துப் போகாத நிலையில் பூமிக்கு முத்தழகு மீது காதல் மலர தொடங்கியுள்ளது. முத்தழகு பூமியை கணவனாக ஏற்றுக் கொண்டார்.
பல போராட்டங்களுக்கு பிறகு கல்யாணம்.. சூப்பர் சிங்கர் பிரபலத்துக்கு குவியும் வாழ்த்துக்கள்!
இப்படி இருக்கையில், பூமியின் முன்னாள் காதலியாக அஞ்சலி என்பவர் தற்போது பூமியை தேடி கிராமத்துக்கு வந்து இருக்கிறார். அவருக்கு, பூமிக்கு கல்யாணம் ஆன விஷயம் எல்லாம் தெரியாது. ஒரு விபத்தில் இருந்து உயிர் பிழைத்த அஞ்சலி, பூமியை இப்போது தேடி வந்து இருக்கிறார். இவ்வளவு நாளாக அஞ்சலி - பூமி சந்தித்து கொள்ளவில்லை. ஆனால் தற்போது வெளியாகி இருக்கும் புரமோவில் பூமி , முத்தழகுக்கு பொட்டு வைப்பதை அஞ்சலி பார்த்து விடுகிறார்.
அதுமட்டுமில்லை இதை தாங்கி கொள்ள முடியாமல் கிணற்றில் விழுந்து தற்கொலை முயற்சியும் செய்கிறார். பூமி அவரை காப்பாற்றுகிறார். அப்போது தான் அஞ்சலி மிகப் பெரிய அதிர்ச்சியை சொல்கிறார். பூமி எடுத்த தாலியை வெளியே காட்டி, இது நீ கட்டியது தானே? அப்ப நான் யாரு? என கேட்க, சீரியலில் ட்விஸ்டுக்கு மேல் ட்விஸ்ட் அரங்கேறியுள்ளது. இந்த புரமோவை பார்த்த ரசிகர்கள், பூமி, பாக்கியலட்சுமி கோபியை ஓவர்டெக் செய்து விட்டதாக கலாய்த்து வருகின்றனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.