Raaja Paarvai: விஜய் டிவி சீரியலுக்காக சன் டிவி-க்கு ’பை பை’ சொன்ன நடிகர்!

Raaja Paarvai: விஜய் டிவி சீரியலுக்காக சன் டிவி-க்கு ’பை பை’ சொன்ன நடிகர்!

முன்னா

சன் டிவி-யின் சந்திரலேகா சீரியலில் சஞ்சய் பரந்தாமனாக நடித்து வந்த முன்னா தான் ’ராஜ பார்வை’ சீரியலில் ஹீரோவாக நடிக்கிறார்.

  • Share this:
    விஜய் டிவி-யின் சீரியலுக்காக சன் டிவி-யில் தான் நடித்து வந்த சீரியலுக்கு பை பை சொல்லியிருக்கிறார் நடிகர் முன்னா என்கிற முனாஃப் ரஹ்மான்.

    சின்னத்திரையில் சீரியல்கள் சுவாரஸ்யமான பொழுதுபோக்கு வடிவங்களில் ஒன்றாகும். கேம் ஷோக்கள், ரியாலிட்டி ஷோக்கள் என பல வகையான பொழுதுபோக்குகள் காலப்போக்கில் டிவி-யில் ஒளிபரப்பானாலும், சீரியல்கள் தான் பெரும்பாலும் ஆதிக்கம் செலுத்துகின்றன.

    ஒரு சீரியலின் முக்கிய வெற்றியே அதன் சுவாரஸ்யமான கதைக்களமும், பிரபலமான கதாபாத்திரங்களும் ஈர்க்கக்கூடிய வகையில் அமைந்த ஸ்கிரிப்ட்டும் தான். ஒவ்வொரு சேனலுக்கும் அதற்கு அடையாளமான பல பிரபலமான தொடர்கள் உள்ளன. அந்த வகையில் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றவை.



     




    View this post on Instagram





     

    A post shared by Munna (@munnainstaofficial)






    இந்நிலையில் விஜய் டிவி-யில் ‘ராஜ பார்வை’ என்ற புதிய சீரியல் மார்ச் 22-ம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது. பார்வையற்ற ஒருவர் காதலில் விழுவதை மையப்படுத்திய இந்த சீரியலின் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதற்கிடையே சன் டிவி-யின் சந்திரலேகா சீரியலில் சஞ்சய் பரந்தாமனாக நடித்து வந்த முன்னா தான் ’ராஜ பார்வை’ சீரியலில் ஹீரோவாக நடிக்கிறார்.

    இதனை தனது சமூக வலைதளத்தில், ’மாற்றம் ஒன்றே மாறாதது! மாற்றமே சிறந்த முன்னேற்றத்தை தரும்! நல்லதொரு மாற்றத்தை எதி்ர் நோக்கி, புதிய பாதையில் புதிய பார்வையுடன் (ராஜ பார்வையுடன்) என் கலை பயணம் இனி விஜய் டிவியுடன் தொடரும்’ எனக் குறிப்பிட்டு, சந்திரலேகா குழுவினருக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார் முன்னா.

    2020 ஜூலை முதல் சந்திரலேகா சீரியலில் முன்னா நடித்து வந்தார். தற்போது அவர் விலகுவதால், சஞ்சய் பரந்தாமன் கதாபாத்திரத்தில் அவருக்கு முன்பு நடித்து வந்த ஜெய் தனுஷ் மீண்டும், சன் டிவி-யின் சந்திரலேகா குழுவில் இணைந்துள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: