Home /News /entertainment /

பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை கர்ப்பமாக இருக்கிறாரா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை கர்ப்பமாக இருக்கிறாரா?

முல்லை

முல்லை

முல்லை கர்ப்பமாக இருப்பதாக வெளியான புகைப்படம் ரசிகர்கள் மனதில் மிகப் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

    சூப்பர் ஹிட்டாகும் சின்னத்திரை சீரியல்களில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு தனிப்பட்ட ரசிகர் கூட்டம் உருவாகும். ஒரு சில கதாபாத்திரங்களால் ஹிட்டாகும் சீரியல்களும் உண்டு. அப்படி ஹிட்டாகும் கதாபாத்திரங்களுக்கு என்று லட்சக்கணக்கான ரசிகர் கூட்டம் அமைவது பல ஆண்டுகளாக வழக்கம். நடிகர், நடிகைகளின் உண்மையான பெயர் மறந்து, சீரியலின் கதாபாத்திரத்தின் பெயரையே அழைக்கும் அளவுக்கு ரசிகர்கள் மனதில் ஒன்றி விடும்.

    உதாரணமாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் மறைந்த நடிகை சித்ரா அவர்களைக் கூறலாம். சித்ரா பல ஆண்டுகள் சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் நடிகையாகவும் இருந்து வந்தாலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை பாத்திரம் அவருக்கு பட்டிதொட்டி எங்கும் புகழ் பெற்றுத் தந்தது. எதிர்பாராதவிதமாக அவர் மறைந்த பிறகு, அந்த இடத்தில் நடிகை காவ்யா அறிவுமணி புது முல்லையாக ரசிகர்கள் மனதில் இடம் பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    தற்போது காவ்யா அறிவுமணி கர்ப்பமாக இருப்பதாக வெளியான புகைப்படம் ரசிகர்கள் மனதில் மிகப் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது இதற்கான காரணம், காவ்யா அறிவுமணி திரைப்படங்களில் வாய்ப்பு கிடைத்து இருப்பதால் பாண்டியன் ஸ்டோர் சீரியல் இருந்து வெளியேறுவதாக சில நாட்களுக்கு முன்னரே அறிவித்திருந்தார். தொடர்ந்து முல்லையாக காவ்யாவின் காட்சிகள் இடம்பெற்று வருவதால், ஏற்கனவே விலகி விட்டாரா அல்லது எப்போது விலகப்போகிறாரா என்பதைப் பற்றிய தெளிவான விவரங்கள் இல்லை.

    தற்போது முல்லை கர்ப்பமாக இருப்பது போன்ற வெளியாகிய புகைப்படங்கள் சீரியலில் வரப்போகும் மாற்றமா அல்லது இவர் நடிக்கும் திரைப்படத்தில் இருக்கும் காட்சியா என்று ரசிகர்கள் குழம்பியுள்ளனர்.

    பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஏற்கனவே இரண்டு குழந்தைகள் பிறந்துள்ள நிலையில், தற்போது இன்னும் குழந்தை பெற்றுக்கொள்ளாத தம்பதிகளாக இருப்பவர்கள் கதிர் மற்றும் முல்லை தான். எனவே, கதைக்களம் அடுத்தது கதிர் முல்லைக்கு குழந்தை பிறப்பது போல மாறலாம் என்ற ரசிகர்கள் எதிர்பார்ப்பை அதிகப்படுத்துவது போலவே காவ்யா அறிவுமணியின் கர்ப்பமாக இருக்கும் புகைப்படம் வெளியானது.

    லாஸ்ட் பென்ச் சிபி ஹீரோவான கதை.. எல்லா புகழும் அக்‌ஷராவையே சேரும்

    ஆனால், இது சீரியலில் நடைபெற்ற மாற்றம் கிடையாது. இந்த புகைப்படம் டாம் அண்ட் ஜெர்ரி என்ற ஒரு வெப் சீரிஸில் இருந்து வெளியானது. இதில் காவயா அறிவுமணி கர்ப்பிணியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தான் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.




    ‘எங்களுக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்த காவ்யா அறிவுமணிக்கு நன்றி. முழு கதையையும் தாங்கும் இவருடைய கேரக்டரில் அற்புதமாக நடித்துள்ளார்.’இந்த வெப் சீரிஸின் நாயகியாக நடித்த காவ்யா அறிவுமணியை பாராட்டி, நன்றி தெரிவித்து சீரிஸ் குழுவினர் பகிர்ந்துள்ளனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja Sreeja
    First published:

    Tags: Vijay tv

    அடுத்த செய்தி