பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் எந்த உண்மையை கதிர் மறைத்தாரோ அந்த உண்மையை கண்டுப்பிடிக்கும் முயற்சியில் முல்லை இறங்கி விட்டார். கதிரின் நடவடிக்கையால் முல்லைக்கு சந்தேகம் வந்து விட்டது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் வாரம் வாரம் ஏதாவது ட்விஸ்ட் கொடுக்க வேண்டும் என்பதில் இயக்குனர் தெளிவாக இருப்பார். எபிசோடுகளை தொடர்ந்து பார்ப்பவர்களுக்கு தெரியும். அந்த வகையில் வரும் வாரம் முல்லை - கதிர் குழந்தை பிரச்சனை தான் மிகப் பெரிய திருப்பமாக வர போகிறது.சமீப காலமாக கதிர் மற்றும் முல்லை காட்சிகளுக்கு தொடர்ந்து சீரியலில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.
read more.. Fixed Deposit திட்டத்தில் இனி எக்ஸ்ட்ரா வட்டி கிடைக்க போகுது.. எஸ்பிஐ சூப்பர் அப்டேட்!
அதாவது, முல்லைக்கு குழந்தை பிறக்க வேண்டும் என்ற ஆசை. ஆனால் அது நடந்த பாடில்லை. சொந்தக்காரர்கள் அனைவரும் இதைப்பற்றி கேட்க ஆரம்பித்து விட்டனர். அதனால் முல்லைக்கு பயம் வந்து விட்டது. இதனால் தனம் இருவரையும் ஆஸ்பிட்டல் போய் செக்கப் செய்ய சொல்கிறார். இருவரும் செல்கிறார்கள். மறுநாள் ரிசல்ட் வருகிறது. முல்லைக்கு தான் பிரச்சனை என்று டாக்டர் சொல்லி விடுகிறார். ஆனால் இதை முல்லையிடம் சொல்லாமல் கதிர் மறைத்து விடுகிறார்.
இதையும் படிங்க.. நல்லா ஞாபகத்தில் வச்சிக்கோங்க.. இந்த வங்கியில் இனி புது அக்கவுண்ட் ஓபன் செய்ய முடியாது!
அதுமட்டுமில்லை முல்லையின் டாக்டர் ரிப்போர்டை பீரோவில் வைத்து பூட்டி விடுகிறார் கதிர். கதிரின் இந்த தொடர் நடவடிக்கை முல்லைக்கு சந்தேகத்தை வர வைத்து விட்டது. இன்றைய எபிசோடில் வீட்டுக்கு வரும் அப்பா மற்றும் கஸ்தூரி அத்தாச்சியிடம் முல்லை இதை பற்றி பேசுகிறார்.” எல்லோரும் குழந்தை பரற்றி கேட்கிறார்கள், என்னிடம் பதில் இல்லை, டாக்டரும் எந்த பிரச்சனையும் இல்லை என்று சொல்லிவிட்டார். அப்ப ,ஏன்
குழந்தை பிறக்கவில்லை என்று தெரியல” என கண்ணீர் விடுகிறார்.
அப்போது தான், எனக்கு ஏதோ பிரச்சனை இருக்கிறது, அது எனக்கே தெரிகிறது. கதிர் அதை மறைப்பதாக தனது தந்தையிடம் சொல்லி விடுகிறார். இதை கேட்டு இருவரும் ஷாக் ஆகுகிறார்கள். முல்லை வருத்தப்பட கூடாது என்பதற்காக தான் கதிர் இதை மறைத்தார். ஆனால் முல்லைக்கு இப்போது சந்தேகம் வந்து விட்டது. இதற்கு ஒருபடி மேலே போய், முல்லையின் அப்பா கதிரிடம் விசாரிக்கிறார். ஆனால் கதிர் இல்லவே இல்லை என சத்தியம் செய்கிறார். வரும் வாரங்களில் இந்த உண்மை முல்லைக்கு தெரிய போவது போல் கதை பயணிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.