மிஸ்டர் ஸூ கீப்பர் என்ற படத்தின் மூலம் ஹீரோவாகியிருக்கிறார் விஜய் டிவி குக் வித் கோமாளி புகழ்.
நடிகராக வேண்டும் என கடலூரிலிருந்து சென்னைக்குச் சென்ற புகழ், 2016-ஆம் ஆண்டு விஜய் டிவி-யில் ஒளிபரப்பான “சிரிப்புடா” என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் முதன்முதலில் கலந்துக் கொண்டார். இருப்பினும், "குக் வித் கோமாளி" நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு, அவருக்கு பெரும் புகழ் கிடைத்தது. குக் வித் கோமாளி இரண்டாம் பாகத்தில் கலந்துக் கொண்ட அவர், தற்போது ஒளிபரப்பாகி வரும் அந்நிகழ்ச்சியின் மூன்றாம் பாகத்திலும் பங்கு பெற்றுள்ளார்.
இதற்கிடையே விஜய் டிவி-யில் ஒளிபரப்பான ’காமெடி ராஜா கலக்கல் ராணி’ நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட புகழ் சினிமாவில் நடித்து வருவதால், நேர பிரச்னை காரணமாக அதிலிருந்து விலகினார். அஜித்துடன் அவர் இணைந்து நடித்த வலிமை, சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் ஆகிய திரைப்படங்கள் சமீபத்தில் வெளியாகின. இதையடுத்து அருண் விஜய்யின் யானை உள்ளிட்ட சில படங்களில் நடித்து முடித்துள்ளார் புகழ்.
AK 62 Update: விக்னேஷ் சிவனுடன் அஜித்தின் 62-வது படம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
இப்படி திரைப்படங்களில் சின்ன சின்ன ரோல்களில் மட்டுமே தோன்றிய புகழ், தற்போது ஹீரோவாக ஒரு படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார். அதன் போஸ்டர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. Mr Zoo Keeper என பெயரிடப்பட்டிருக்கும் அந்தப் படத்தின் ஷூட்டிங் மார்ச் 20-ம் தேதியான நேற்று முதல் ஊட்டியில் தொடங்கியது. இதையடுத்து பிலிப்பைன்ஸ் நாட்டிலும் படமாக்கப்படவிருக்கிறது.
சாபம் விட்ட எல்லாருக்கும் நன்றி... விஜய் டிவி பாவம் கணேசன் நவீன் மனைவி கண்ணீர்
இந்த படத்தில் நிஜமான புலியுடன் படப்பிடிப்பு நடத்த வேண்டியிருப்பதாலும், இந்தியாவில் அதற்கு அனுமதி இல்லை என்பதாலும் Mr Zoo Keeper படத்தின் படப்பிடிப்பு பிலிப்பைன்ஸில் நடக்கிறது. ஃபர்ஸ்ட் லுக்கை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வெளியிட்டு பேசிய புகழ், ’தன்னை மக்கள் ஏற்றுக்கொள்ள குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான் காரணம்’ என உணர்ச்சி வசப்பட்டு கூறினார். தவிர படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது சமூக வலைதளங்களிலும் வெளியிட்டுள்ளார் புகழ். இதையடுத்து அவருக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.