• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • மணிமேகலைக்கு இப்படி நடந்து இருக்க கூடாது... விஜய் டிவி மீது பாயும் ரசிகர்கள்! அப்படி என்ன நடந்தது?

மணிமேகலைக்கு இப்படி நடந்து இருக்க கூடாது... விஜய் டிவி மீது பாயும் ரசிகர்கள்! அப்படி என்ன நடந்தது?

விஜே மணிமேகலை

விஜே மணிமேகலை

விஜய் டிவிக்கு எதிராகவும், மணிமேகலைக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.

  • Share this:
    மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் விஜே மணிமேகலையை உருவ கேலி செய்யும் புரமோ வீடியோ ரசிகர்களின் கடும் எதிர்ப்புக்கு ஆளாகியுள்ளது.

    விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியின் சீசன் 3 தற்போது விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வருகிறது.இந்த நிகழ்ச்சியில் சின்னத்திரை நடிகர் நடிகைகள் தங்களது குடும்பத்தினர் உடன் நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். முதல் இரண்டு சீசன்களுக்கு கிடைத்த ஏகோபித்த வரவேற்பை தொடர்ந்து மூன்றாவது சீசன் தொடங்கப்பட்டது. இந்த சீசனும் வெற்றிக்கரமாக சென்று கொண்டிருக்கிறது. நீயா நானா கோபிநாத் மற்றும் தேவதர்ஷினி நடுவர்களாக உள்ளனர். இந்த நிகழ்ச்சியை ஆரம்பத்தில் மா.கா.பா ஆனந்த் மற்றும் பிக் பாஸ் அர்ச்சனா தொகுத்து வழங்கி வந்தனர். இந்நிலையில் தான் அர்ச்சனா உடல்நலம் சரியில்லாததால் நிகழ்ச்சியில் இருந்து விலக கடந்த சில வாரங்களாக அறந்தாங்கி நிஷா தொகுத்தி வழங்கினார்.

    இந்நிலையில் இந்த வாரம் விஜே மணிமேகலை நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். விஜய் டிவிக்கு ஆங்கரை மாற்றுவது என்பது புதிதல்ல. நிகழ்ச்சியின் ஆங்கர்களால் தவிர்க்க முடியாத காரணத்தால் வர முடியவில்லை என்றால் நிஷா, மணிமேகலை, ராஜா ராணி அர்ச்சனா போன்றவர்களை ஆங்கராக்கி வெற்றிக்கரமாக அந்த எபிசோடை முடித்துவிடுவார்கள். இந்நிலையில் தற்போது விஜே மணிமேகலை மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியை தொகுத்து வழங்க, அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மைனாவின் மாமியார், லோகேஷின் அம்மா, மணிமேகலையை கலாய்ப்பதாக நினைத்து உருவகேலி செய்யும் வீடியோ கடும் எதிர்ப்பை பெற்றுள்ளது.

    குறிப்பாக ரசிகர்கள் விஜய் டிவி மீது பாய தொடங்கியுள்ளனர். விஜய் டிவியின் பெரும்பாலான ரியாலிட்டி ஷோக்களில் வழக்கமாக நடப்பது உருவ கேலி. குண்டு, கறுப்பு, குள்ளம்  ஜோக் என்ற பெயரில் உருவகேலியை எளிதாக செய்து விட்டு அதற்கு கைதட்டும் பெறுவார்கள். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பிரியங்காவையே அப்படி தான் கலாய்ப்பார்கள். நிஷாவும் பலமுறை இதுப்போன்ற சூழலை சந்தித்துள்ளார். ஒரு முறை மூக்குத்தி முருகனை கேலி செய்ததற்கு நடிகை ஸ்ரீபிரியா கடுமையாக விமர்சித்து இருந்தார். இதுப்போன்ற நிகழ்வுகள் விஜய் டிவியில் சகஜம் என்பதற்கு தற்போது மற்றொரு நிகழ்வும் அரங்கேறியுள்ளது.



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் மைனாவின் மாமியார், அதாவது அவரின் கணவர் லோகேஷின் தாயார் கலந்துகொள்ள வந்துள்ளார். அவரிடம் ஏதோ கேள்வி கேட்பதற்காக மணிமேகலை அவரிடம் மைக் கொடுத்து கேள்வி கேட்க தொடங்குகிறார். அவர் கேள்வியை முழுசாக கூட கேட்கவில்லை. அதற்குள் லோகேஷின் அம்மா, சம்பந்தமே இல்லாமல மணிமேகலையை கலாய்ப்பாத நினைத்து கொண்டு ஏதோ ஏதோ சொல்கிறார். அதுக்கூட பரவாயில்லை. ஆனால் அதன் பின்பு தான் சர்ச்சை ஆனது. மணிமேகலை ஆடை குறித்து கமெண்ட் செய்தவர், அவரின் உருவத்தையும் கேலி செய்கிறார். இதற்கு மணிமேகலை பெரிதாக ரியாக்ட் செய்யவில்லை என்றாலும் வீடியோவை பார்த்தவர்கள் இதுப்போன்று பெண்களை உருவகேலி செய்வதை ஜோக் என நினைத்து புரமோவாக வெளியிடாதீர்கள். பார்ப்பவர்களுக்கு தவறான முன்னுதாரணமாகும் என கருத்து தெரிவித்துள்ளனர்.

    அதுமட்டுமில்லை, பலர், விஜய் டிவிக்கு எதிராகவும், மணிமேகலைக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர். மணிமேகலை இன்ஸ்டா பக்கத்திலும் இதுப்போன்ற கேலிகளை இனியும் ஆதரிக்க வேண்டாம் என்றும் ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: