ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

மிகப் பெரிய சந்தோஷத்தில் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை ஜோடி ராம் - ஜானு!

மிகப் பெரிய சந்தோஷத்தில் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை ஜோடி ராம் - ஜானு!

ராம் - ஜானு

ராம் - ஜானு

மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் இவர்கள் போட்டியாளராக களம் இறங்கியுள்ளனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  யூடியூப் பிரபலங்களான ராம் - ஜானு  மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை சீசன் 4 ஃபைனல்ஸூக்கு தேர்வாகியுள்ளனர். 

  யூடியூபில் பிரபலமான ராம்-ஜானு கல்லூரி காலத்திலிருந்தே காதலித்து வந்தனர். இவர்கள் இருவரும் இணைந்து ஆரம்பித்த யூடியூப் சேனல் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து இருவரும் ஒரே வீட்டில் வசிக்க தொடங்கினர். இவர்களின் வீடியோ யூடியூப்பில் இளைஞர்களை கவர இருவரும் பிராங் வீடியோ, சேலன்ச் வீடியோ என தொடர்ந்து விலாக் வீடியோக்களை வெளியிட்டு ஃபலோவர்ஸை தங்கள் வசப்படுத்தினர். இவர்களை மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் பின் தொடர்கின்றனர். ராம்- ஜானு என்பது இவர்களின் யூடியூப் பெயர். இவர்களின் நிஜப்பெயர் பாலாஜி - கீர்த்தி.

  அந்த விஷயத்தில் வனிதாவுக்கே டஃப் கொடுக்கும் அனிதா!

  இதில் கீர்த்தி சன் டிவியில் ஒளிப்பரப்பான சீரியலில் நடித்துள்ளார். அப்போது அவருக்கு காலில் ஆப்ரேஷன் நடக்க சின்னத்திரையை விட்டு விலகினார்.  சில ஆண்டுகளுக்கு பிறகு இப்போது மீண்டும் விஜய் டிவியில் கீர்த்தி என்ட்ரி கொடுத்துள்ளார். அதுவும் அவரின் காதல் கணவர் பாலாஜியுடன். விஜய் டெலிவிஷனின் மிகப் பெரிய ரியாலிட்டி ஷோவான மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் இவர்கள் போட்டியாளராக களம் இறங்கியுள்ளனர்.

  கஷ்டத்தில் காரை விற்ற ஆல்யா கணவர் சஞ்சீவ்.. பலருக்கும் தெரியாத உண்மை!

  மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை 4வது சீசன் தற்போது டெலிகாஸ்ட் ஆகிவருகிறது. ஏற்கெனவே 3சீசன்கள் வெற்றிக்கரமாக முடிந்த நிலையில் 4வது சீசனில் 10 போட்டியாளர்கள் களம் இறங்கினர். அதில் முதல் ஜோடியாக அஜய் கிருஷ்ணா - ஜெஸி ஜோடி தனிப்பட்ட காரணங்களால் விலகினார். பல்வேறு கட்டங்களுக்கு பிறகு தற்போது டாப் 5 ஜோடிகள் ஃபைனல்ஸூக்கு சென்றுள்ளனர்.
   
  View this post on Instagram

   

  A post shared by VijayTv Family (@vijaytvfamily)  அதில் ராம் - ஜானு ஜோடியும் ஒருவர். இவர்களுடன் தீபன் - சுகன்யா, ரேஷ்மா - மதன், மகாலிங்கம் - ராஜேஸ்வரி, ஃபரீனா - ரஹ்மான் ஆகிய ஜோடிகளும் ஃபைனல்ஸ்க்கு தேர்வாகியுள்ளனர். இறுதி போட்டியில் பட்டத்தை வெல்ல போவது யார்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. அதே போல் சமூக வலைத்தளங்களில் மிகப் பெரிய ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருக்கும் ராம் - ஜானு ஜோடிக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: Vijay tv, Youtube