Home /News /entertainment /

உச்சக்கட்ட பரபரப்பில் மெளன ராகம்.. காதம்பரியை கைது செய்யும் போலீஸ்!

உச்சக்கட்ட பரபரப்பில் மெளன ராகம்.. காதம்பரியை கைது செய்யும் போலீஸ்!

மெளன ராகம் 2

மெளன ராகம் 2

மெளன ராகம் இன்றைய எபிசோடில் போலீஸிடம் ரவுடி எல்லா உண்மையும் சொல்லிவிடுகிறார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    மெளன ராகம் சீரியலில் இன்றைய எபிசோடில் கார்த்திக் கிருஷ்ணா வீட்டுக்கு வரும் போலீஸ் காதம்பரி மற்றும் அவரின் அம்மா ருக்குமணியை கைது செய்கின்றனர்.

    மெளன ராகம் 2 சீரியல் தற்போது பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. சக்தி - தருண் வாழ்க்கைக்கு உதவ போன கார்த்திக் கிருஷ்ணா கத்தி குத்துடன் படுத்துக் கொண்டிருக்கிறார். அதற்கு காரணம் காதம்பரி, ருக்குமணி மற்றும் ஸ்ருதி. இவர்கள் மூவரும் சக்தியை கொலை செய்ய திட்டம் போட்டனர். அதற்கு பணம் கொடுத்து ரவுடியையும் ஏற்பாடு செய்தனர். அந்த ரவுடி சக்தியை குத்த போன போது கார்த்திக் கிருஷ்ணா அதை பார்த்து விடுகிறார். அவரின் வயிற்றில் கத்தி ஆழமாக இறங்கி விடுகிறது. ரவுடி எஸ்கேப் ஆகிவிட்டான்.



    சன் டிவியில் மீண்டும் பூவரசி.. ரசிகர்கள் செம்ம ஹேப்பி!

    ஆனால் சக்தி மட்டும் அந்த ரவுடியை பார்த்து விடுகிறார். இப்படி இருக்கையில் தாங்கள் ஏற்பாடு செய்த ரவுடி யாரிடமும் மாட்ட வாய்ப்பு இல்லை என நினைத்து காதம்பரியும் ருக்குமணியும் தைரியமாக இருந்தார்கள். ஆனால் கடைசியில் சக்தி சென்னைக்கு வந்த போது அந்த ரவுடியை பார்த்து விடுகிறார். அவரின் வண்டி நம்பரையும் நோட் செய்து கொண்டார். அதை வைத்து மனோகருக்கு தெரிந்த போலீஸ் ரவுடியை கண்டுப்பிடித்து விடுகிறார்கள். இந்த அதிர்ச்சியான விஷயம் ஸ்ருதிக்கு தெரியாது.

    இப்படி இருக்கையில் இன்றைய எபிசோடில் போலீஸிடம் ரவுடி எல்லா உண்மையும் சொல்லிவிடுகிறார். ருக்குமணி பணம் கொடுத்து சக்தியை கொலை செய்ய சொன்னது, சென்னைக்கு வர வைத்து ருக்குமணி பணம் கொடுத்தது என எல்லாவற்றையும் சொல்ல,  வருணுக்கு கோபம் தாங்கல. காதம்பரி மற்றும் ருக்குமணி மீது போலீஸ் புகார் கொடுக்கிறார். இந்த புகாரை வாங்கி கொண்ட போலீஸ் காதம்பரி வீட்டுக்கு செல்கின்றனர்,

    கூடிய விரைவில் முடிவுக்கு வரும் விஜய் டிவி சீரியல்?

    அதற்குள் சொர்ணம் ஊரில் இருக்கும் பழனி மற்றும் மல்லிகாவுக்கு தகவல் கொடுக்கிறார்,. அவர்களும் சென்னை கிளம்பி வருகிறார்கள். அதுமட்டுமில்லை சின்ன வயசில் சக்தி பட்ட கஷ்டங்களையும் சொர்ணம், வருண் மற்றும் மனோகரிடம் சொல்லி கண்ணீர் வடிக்கிறார். வீட்டுக்கு போகும் போலீஸ் கார்த்திக் கிருஷ்ணாவிடம் எல்லா உண்மைகளையும் சொல்லி பிடி வாரண்டை காட்டுக்கின்றனர். காதம்பரி மற்றும் அவரின் அம்மா  ருக்குமணியை போலீஸ் கைது செய்கின்றனர். இதோடு இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி