பொதுவாகவே திரைத் துறையில் இருக்கும் பிரபலங்களின் பிள்ளைகள் அதே துறையில் தான் தங்களுடைய கேரியரைத் தொடங்குவார்கள். குறிப்பாக, நடிகர் நடிகைகளுக்கு இது பொருந்தும். பல தலைமுறைகளாக சினிமாவிலேயே இருக்கும் நட்சத்திரங்களும் உள்ளனர். தற்போது கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் நாயக நாயகிகளுக்கு கூட அவர்களின் வாரிசுகள் திரைத்துறையில் வரலாம். திரைத்துறையில் அறிமுகம் ஆகும் நடிகர்களின் மகன்கள் / மகள்கள் அனைவருமே பெரிய நட்சத்திரங்களாக வருவது இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம், நடிகர் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு, நடிகர் கார்த்திக்கின் மகன் கவுதம் கார்த்திக், மலையாள திரையுலகில் இருந்து துல்கர் சல்மான், ஃபகத் ஃபாசில், தெலுங்கு திரையுலகில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர் வரிசையில் அடுத்தது இந்த நடிகரின் மகன் வெள்ளித்திரையில் அறிமுகம் ஆவாரா என்று பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தனது வாழ்க்கை சினிமா தான் என்பது இது வரை எங்குமே வெளிப்படுத்தாத நிலையிலேயே இந்த உச்ச நட்சத்திரத்தின் மகனுக்கு அதிக டிமாண்ட் ஏற்பட்டுள்ளது. விஜய் டிவி சீரியலில் நடித்து வரும் நாயகி தனக்கு இந்த நடிகரின் மகனுடன் ஜோடியாக நடிக்க வேண்டும் என்று ஒரு ஆசை இருக்கிறது என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.
தன் ஆசையை வெளிப்படுத்திய நடிகை தற்போது விஜய் டிவி மௌன ராகம் சீரியலில் கலக்கி வரும் ரவீணா தாஹா தான். இவர் சின்னத்திரைக்கு புதியவர் அல்ல. பெரிய திரைக்கும் புதியவர் அல்ல. குழந்தை நட்சத்திரமாக பல்வேறு படங்களில் இவர் கலக்கி இருக்கிறார் உதாரணமாக ஜில்லா, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய இரண்டு படங்களைக் கூறலாம். மெகா ஹிட் திரைப்படமான ராட்சசன் திரைப்படத்தில் நடித்த பிறகு இவருக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்தது. அதைத் தொடர்ந்து தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மௌனராகம் சீசன் 2 சீரியலில் முன்னணி பாத்திரத்தில் நடித்து வருகிறார்.
also read : குழந்தை அணு கிடைச்சாச்சு... கடத்தியவர்களை காப்பாற்றிய சத்யா ஏன் தெரியுமா.?
அது மட்டுமின்றி சமூக வலைதளத்திலும் மிகவும் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. வெள்ளித்திரையில் பல திரைப்படங்களில் நடித்தாலும் சட்டென்று சீரியலுக்கு வந்தது கொஞ்சம் குழப்பமாகத்தான் இருக்கிறது. ஆனால், இவரே சீரியலில் நடிக்க விருப்பப்பட்டு, ஆடிஷனுக்கு சென்றதாக கூறியுள்ளார். ஏற்கனவே ஜீ தமிழ் பூவே பூச்சுடவா என்ற மெகா சீரியலில் ரங்காதாக நடித்திருந்தாலும் சின்னத்திரையில் இவருக்கு இன்று தனிப்பட்ட அடையாளத்தை கொடுத்தது மௌன ராகம் சீரியல் தான்.
Also read : தெலுங்கு முன்னணி நடிகருடன் இணையும் கீர்த்தி சுரேஷ்...
மீண்டும் வெள்ளித்திரையில் நடிப்பாரா என்ற கேள்விக்கு சினிமா திரைப்படங்களில் நடிப்பதற்கு இருக்கும் என்றும் நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் திரைப்படங்களில் நடித்தால் அவருக்கு ஜோடியாக நடிக்க மிகவும் விரும்புகிறேன் என்றும் ரவீணா கூறியிருக்கிறார். விஜய்யின் மகன் எப்பொழுது நடிகராக அறிமுகமாவார் என்ற கேள்வி கடந்த சில ஆண்டுகளாக விஜய்யை துரத்தி வருகிறது. அதுமட்டுமின்றி சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது தலைகாட்டும் விஜய் மகன் சஞ்சய்யும் இதைப் பற்றி எதுவும் கூறவில்லை.
பள்ளி படிப்பை முடித்து சினிமா சம்பந்தப்பட்ட உயர் படிப்புக்காக சஞ்சய் வெளிநாட்டுக்கு சென்றுள்ளார். இதன் மூலம் சஞ்சய்க்கு நடிப்பதில் விருப்பமில்லை என்றும் இயக்குனராக விருப்பம் இருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது. பிரேமம் புகழ் இயக்குனர் அல்போன்ஸ் விஜய் மகனுக்காக ஒரு கதையை தயார் செய்து வைத்துள்ளார் என்ற செய்தி ஏற்கனவே வைரலாக பரவியது. ஆனால் அதற்கு தன் மகனுக்கு நடிப்பதில் தற்போது விருப்பமில்லை என்று விஜய் மறுத்ததாகக் கூறப்பட்டது. எப்படி இருந்தாலும், நடிகர்களின் மகன்கள் நடிப்பதற்கு ஈடுபாடு காட்டுவார்கள் என்று, விஜய் மகனும் விரைவில் நடிக்க வருவார் என்று பேசப்பட்டு வருகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.