• HOME
 • »
 • NEWS
 • »
 • entertainment
 • »
 • இந்த சின்ன வயசுல சீரியலில் லீட் ரோல்.. மிகப்பெரிய வெற்றி! பொறாமைப்பட வைக்கும் சக்தி!

இந்த சின்ன வயசுல சீரியலில் லீட் ரோல்.. மிகப்பெரிய வெற்றி! பொறாமைப்பட வைக்கும் சக்தி!

மெளன ராகம் சக்தி

மெளன ராகம் சக்தி

ஜில்லா படத்தில் விஜய் உடன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

 • Share this:
  மெளன ராகம் சீரியலில் சக்தியாக லீட் ரோலில் நடிக்கும் ரவீனாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இவரின் இன்ஸ்டா ரீல்ஸ்கள் தினம் தினம் லைக்ஸ்களை அள்ளி குவிக்கிறது.

  விஜய் டிவியில் கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி நல்ல ஹிட்டடித்த சீரியல் மௌனராகம். அந்த தொடரில் சக்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் பேபி கிருத்திகா. தற்போது சீரியலின் இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் கிருத்திகாவிற்கு பதிலாக ரவீனா நடித்து வருகிறார். முதல் சீசனை போலவே இரண்டாம் பாகத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இரண்டாம் பாகத்தில் சக்தி வளர்ந்து கல்யாணம் ஆகிவிட்டது. தற்போது கதையம்சம் இந்த கோணத்தில் தான் சென்றுக்கொண்டிருக்கிறது. அம்மா மல்லிகாவுக்கு தெரியாமல் சக்தி தாலியை மறைத்துகொண்டு தினம் தினம் போராடி கொண்டிருக்கிறார். இந்த சீரியலில் குறிப்பாக சக்தியாக நடித்திருக்கு ரவீனாவின் நடிப்பு பெரும்பாலான ரசிகர்களை கவர்ந்துள்ளது.

  இவ்வளவு மெச்சூரான ரோல் நடிக்கும் ரவீனாவின் உண்மையான வயது 18 தான். இருப்பினும் கதையின் ஆழத்தை உணர்ந்து மிகச் சிறப்பான் நடிப்பை வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார். இந்த சீரியலும் டி.ஆர்.பியில் நல்ல ரேட்டிங்கில் உள்ளது. ரவீனாவின் முதல் சினிமா பயணம் என்றால் அது விஜய்யுடன் நடித்த ஜில்லா திரைப்படம் தான். அதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பின்பு 2016ஆம் ஆண்டு வெளியான ‘கதை சொல்லப் போறோம்’ என்ற படத்தில் நடித்தார். அதன் பின்பு சின்னத்திரை வாய்ப்பு அவருக்கு தேடி வந்தது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  ஜீ தமிழின் பூவே பூச்சூடவா சீரியல் மூலம் சின்னத்திரை நடிகையாக என்ட்ரி கொடுத்தார். .கடந்த 2018ஆம் ஆண்டு விஷ்ணு விஷால், அமலா பால் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பராக வெற்றியடைந்த திரைப்படம் ராட்சசன். இதில்.அம்மு அபிராமிக்கு அடுத்ததாக மாணவி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ரவீனா. படம் வெளியான சமயத்தில் இவரின் கதாபாத்திரம் பெரிதளவில் பேசப்பட்டது. படம் வெளியான சில மாதங்களிலே விஜய் டிவியில் இவரின் மெளன ராகம் 2 புரமோ வெளியாகியது. புரமோவைக் கண்ட ரசிகர்கள் ஷாக் ஆகினர். இந்த சின்ன பொண்ணுக்கு இவ்வளவு பெரிய லீட் ரோலா? எப்படி நடிப்பார்? என்றெல்லாம் சமூகவலைத்தளங்களில் கமெண்டுகள் பறந்தனர். ஆனால் சீரியலில் இவரின் நடிப்பு பலரையும் வாயடைக்க செய்தது.
  நடிப்பைத் தாண்டி ரவீனா சோஷியல் மீடியாவில் படு பிஸி. இவரின் இன்ஸ்டா பக்கம் லைக்ஸ்களால் குவிகிறது. இவர் நடத்தும் ஃபோட்டோஷூட்டுகள் இளம் கதாநாயகிகளுக்கு டஃப் கொடுக்கிறது. டான்ஸ், நடிப்பு, இசை என எல்லாவற்றிலும் ஒரு கலக்கு கலக்குகிறார் ரவீனா.

  ரசிகர்களை சிரிக்க வைக்கிற நிஷாவுக்கு இப்படியொரு நிலைமையா? காரணம் பிக் பாஸ் நிகழ்ச்சி!

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Sreeja Sreeja
  First published: