மெளன ராகம் சீரியல் புகழ் ரவீனாவின் அரபிக் குத்து டான்ஸ் பற்றி தான் இன்ஸ்டாவே பேசுது. சின்னத்திரை பிரபலங்கள், வெள்ளித்திரை பிரபலங்கள் என ஒட்டு மொத்த நட்சத்திர பட்டாளங்களும் அரபிக் குத்து பாடலை இன்ஸ்டா ரீல்ஸில் வெளிட்டு வருகின்றனர். அந்த வகையின் ரவீனா, பாட்டியுடன் சேர்ந்து கலக்கலாக டான்ஸ் ஆடி இன்ஸ்டாவில் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
எந்த பக்கம் திரும்பினாலும் அரபிக் குத்து ஃபீவர் தான். சமந்தா முதல் ஹாலிவுட், பாலிவுட் என பட்டி தொட்டி எங்கும் அரபிக் குத்து பாடலுக்கு பிரபலங்கள் டான்ஸ் ஆடி வீடியோவாக வெளியிட்டு வருகின்றனர். அதற்கு ஒருபக்கம் லைக்ஸ்கள் குவிந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் வித்யாசமாக சீரியல் நடிகை ரவீனா செய்திருக்கும் விஷயம் இன்னும் பலரின் லைக்ஸ்களை அள்ளி இருக்கிறது. நடிகர் விஜய்யின் படத்தில் குழந்தை நட்சத்திரமாகி இன்று
விஜய் டிவியின் முன்னணி சீரியலில் கதாநாயகியாக கலக்கி வரும் நடிகை ரவீனா சோஷியல் மீடியாவில் பயங்கர ஆக்டிவ். புகைப்படங்களை வெளியிடுவது, ஃபோட்டோ ஷூட் செய்வது, இன்ஸ்டா ரீல்ஸ்களை வெளியிடுவது என தனது வயதுக்கு ஏற்றார் போல் சுறுசுறுப்பாக இருப்பார். லட்சக்கணக்கான ஃபாலோவர்ஸ்களையும் கொண்டுள்ளார். இவரின் நடன திறமையை பலரும் வியந்து பாராட்டி உள்ளனர்.
இதையும் படிங்க.. தாமரையுடன் பேசினாரா சிவகார்த்திகேயன்? பிக் பாஸ் அல்டிமேட்டில் தெரிய வரும் அடுத்தடுத்த உண்மைகள்!
ஜில்லா படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமான நடிகை ரவீனா ,ராட்சசன் படத்தில் மாணவியாக நடித்து அனைவரையும் கவர்ந்தார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான டான்ஸ் ஜோடி டான்ஸ் 2.0 நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார். அதே ஜீ தமிழ் டிவியில் பூவே பூச்சூடவா சீரியலில் சின்னத்திரையில் நடித்தார். தற்போது, விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மௌன ராகம் 2 சீரியலில் ஹீரோயினாக நடித்து ரசிகர்களின் மத்தியில் வரவேற்பைப் பெற்று கலக்கி வருகிறார்.
மௌன ராகம் 2 சீரியலில் இவருடைய நடிப்பு ரசிகர்களால் பாராட்டப்படுகிறது.
இந்நிலையில் ரவீனா அரபிக் குத்து பாடலுக்கு மெளன ராகம் சீரியலில் கார்த்திக்கின் அம்மாவாக நடிக்கும் பாட்டிம்மா உடன் சேர்ந்து டான்ஸ் ஆடி அதை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இந்த வயதிலும் பாட்டிம்மா எனர்ஜியுடன் ஆடும் வீடியோவை பலரும் ரசித்து பார்த்து வருகின்றனர். அதுமட்டுமில்லை, இந்த வயதிலும் அவரை உற்சாகப்படுத்தி ஆட வைத்த ரவீனாவையும் ரசிகர்கள் பாராட்ட மறக்கவில்லை.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.