Home /News /entertainment /

மல்லிகாவின் மகள் தான் சத்யா என்ற உண்மையை கண்டுப்பிடித்தாரா ஸ்ருதி?

மல்லிகாவின் மகள் தான் சத்யா என்ற உண்மையை கண்டுப்பிடித்தாரா ஸ்ருதி?

ஸ்ருதி - சத்யா

ஸ்ருதி - சத்யா

mouna ragam 2 :   சத்யாவின் அம்மா பெயர் மல்லிகா என்ற உண்மை தெரிந்தால் அடுத்து மிகப் பெரிய பிரச்சனை வெடிக்கும்.

    மெளன ராக 2 சீரியல் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஸ்ருதிக்கு சத்யா மீது சந்தேகம் வந்து விட்டது. அதை உறுதி செய்ய சத்யா அம்மா மற்றும் அப்பா பற்றி விடாமல் கேள்வி கேட்கிறார். சத்யாவின் பதிலில் பொய் இருப்பதை கண்டுப்பிடித்த ஸ்ருதி, இதுக் குறித்த உண்மையை கண்டுப்பிடிக்க களத்தில் இறங்கிவிட்டார்.

    விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் மெளன ராகம் 2 சீரியல் இளைஞர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்கள் லிஸ்டில் இருக்கிறது. இதற்கு காரணம் மெளன ராகம் சீரியலின் கதையோட்டம் தான். முதல் பாகத்தில் முழுக்க முழுக்க குழந்தைகளை கவரும் வகையில் திரைக்கதை பயணித்து கொண்டிருந்தது.ஆனால் இரண்டாம் பாகத்தின் கதை அப்படியே தலைகீழானது. சீரியலில் இப்போது சத்யாவாக ரவீனா நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக சல்மான் நடிக்கிறார். வருண் - சத்யா திருமணத்திற்கு பிறகு டோட்டலாக சீரியலின் ரூட்டே மாறியது.

    இதையும் படிங்க.. சீரியலுக்கு வருவதற்கு முன்பு நான் செய்த வேலை இதுதான்… ஷாக் கொடுத்த கோகுலத்தில் சீதை வசு!

    இவர்கள் இருவருக்கும் இடையில் அரங்கேறும் ரொமான்ஸ் காட்சிகள் இணையத்தில் படு வைரல். இந்நிலையில் பல போரட்டங்களுக்கு பிறகு சத்யாவும் வருணும் சேர்ந்து வாழ தொடங்கி விட்டனர். இது வருணின் அத்தைக்கு பிடிக்கவில்லை. இவர்களை பிரிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் பல கெடுதல்களை செய்து வருகிறார். சத்யாவை வெளியே துரத்த ஸ்ருதியின் துணை அவருக்கு தேவைப்பட்டது. அதனால் தன்னுடைய மகள் தருணுக்கு ஸ்ருதியை கல்யாணம் செய்து வைத்தார். ஆனால் தருணுக்கு இதில் துளியும் சம்மந்தம் இல்லை. அதே நேரம் சந்தோஷமாக வாழும் சத்யா- வருணை பார்த்து பொறாமையும் கொள்கிறார்.

    இது இப்படி இருக்க, சத்யாவுக்கு கார்த்திக் சப்போர்ட் செய்வதும் ஸ்ருதிக்கு பிடிக்கவில்லை. இதனால் அவருக்கு சத்யா மீது சந்தேகம் வருகிறது. அதாவது கார்த்திக்கின் மூத்த மனைவி மல்லிகாவின் மகளாக சத்யா இருப்பாரோ என்ற சந்தேகம். அதனால் சத்யா குடும்பத்தை பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுகிறார். சத்யாவிடம் அப்பா பெயர், அம்மா பெயர் பற்றி மாற்றி மாற்றி கேட்கிறார். மல்லிகாவின் பெயரை சொன்னால் மாட்டிக் கொள்வோம் என்ற பயத்தில் சத்யா வேற பெயர் சொல்லி சமாளிக்கிறார். அதுவும் பொய் என்பதை ஸ்ருதி கண்டுப்பிடித்து விட்டார்.

    இதையும் படிங்க.. தாமரையுடன் பேசினாரா சிவகார்த்திகேயன்? பிக் பாஸ் அல்டிமேட்டில் தெரிய வரும் அடுத்தடுத்த உண்மைகள்!

    அதுமட்டுமில்லை, சத்யாவின் மியூசிக் கிளாஸ் ஒப்பனிங்குக்கு சத்யாவின் அம்மாவை எல்லோரும் கூப்பிடுகின்றனர். அவர் வந்தால், ஸ்ருதிக்கு எல்லா உண்மையும் தெரிந்து விடும், கார்த்திக் மறுபடியும் பிரச்சனையில் மாட்டிக் கொள்வார் என்பதால் மல்லிகா விழாவுக்கு வரமாட்டேன் என்கிறார். ஒருவேளை ஸ்ருதிக்கு,  சத்யாவின் அம்மா பெயர் மல்லிகா என்ற உண்மை தெரிந்தால் அடுத்து மிகப் பெரிய பிரச்சனை வெடிக்கும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி