ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சத்யாவை தேடி போகிறாரா வருண்? ஸ்ருதிக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!

சத்யாவை தேடி போகிறாரா வருண்? ஸ்ருதிக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!

மெளன ராகம் 2

மெளன ராகம் 2

மெளன ராகம் 2 வில் வருண், சத்யாவை பார்க்க ஊருக்கு செல்வார் அங்கு சத்யாவுடனே தங்குவார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  மெளன ராகம் 2 சீரியலில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் வருண் - சத்யா கதைக்கு இயக்குனர் முக்கியத்துவம் கொடுக்க தொடங்கி விட்டார்.

  மெளன ராகம் 2 சீரியல் தற்போது மின்னல் வேகத்தைல் பயணித்துக் கொண்டிருக்கிறது. சத்யாவின் உண்மை பெயர் சக்தி என்பதில் தொடங்கி நிஜ அப்பா, கார்த்திக் கிருஷ்ணா என்ற உணர்ச்சிப்பூர்வமான உண்மை வெடித்த தருணம் வரை சீரியலில் அடுத்தடுத்து ஏகப்பட்ட ட்விஸ்டுகள் அரங்கேறி வருகின்றன. ஒருபக்கம் மனோகருக்கு சத்யா, கார்த்திக் கிருஷ்ணா பொய் சொல்லி தன்னை ஏமாற்றி விட்டனர் என்ற கோபம். மறுபுறம் ஸ்ருதி, சத்யா, மல்லிகாவை பற்றி தப்பு தப்பாக குடும்பத்தில் பரப்புகிறார். இதனால் வருணும் மனம் உடைந்து போகிறார்.

  ’ராஜா ராணி 2’ சீரியல் நடிகைக்கு திருமணம் ஆகிவிட்டது! உங்களுக்கு தெரியுமா?

  ஸ்ருதி, இதோடு சத்யா வர மாட்டார், வருணும் சத்யாவும் பிரிந்து விட்டார்கள் என்று ஹாப்பியாக இருக்கிறார். அதே போல், மல்லிகாவை தேடி போன காதம்பரியை கத்தி முனையில் மிரட்டி அனுப்பினார் சத்யா. கடைசியில் ஷீலா, காதம்பரி, அவரின் அம்மா எல்லோரும் அசிங்கப்பட்டு அங்கிருந்து கிளம்புகின்றனர். இன்றைய எபிசோடில் தானாக்குளத்தில் நடந்த மொத்த பிரச்சனையையும் சத்யாவின் மாமா, கார்த்திக் கிருஷ்ணாவிடம் சொல்லிவிடுகிறார். வீட்டுக்கு வரும் காதம்பரியை கார்த்திக் கிருஷ்ணா திட்ட, சத்யாவையும் மல்லிகாவையும் நிம்மதியாக வாழ விடமாட்டேன் என சபதம் போடுகிறார் காதம்பரி.

  இப்படி இருக்கையில், வருண், மனோகரிடம் ஏற்காடு போவதாக கூறுகிறார். அதாவது இந்த பிரச்சனைகளை மறக்க நண்பரின் கெஸ்ட் ஹவுஸில் போய் தங்க போவதாக கூறுகிறார். 1 மாதம் ஏற்காடில் இருந்து விட்டு பிறகு வருகிறேன் என்கிறார். ஆனால் உண்மையில் வருண் ஏற்காடு தான் போக போகிறாரா? என்ற சந்தேகமும் ரசிகர்களுக்கு வர தொடங்கி இருக்கிறது. வீட்டில் பொய் சொல்லிவிட்டு வருண், சத்யாவை பார்க்க ஊருக்கு செல்வார் அங்கு சத்யாவுடனே தங்கி இருப்பார். பிரிந்த இருவரும் மீண்டு ஒன்றாக சேர போகிறார்கள் இனிமேல் இந்த ட்ராக் தான் ஒளிப்பரப்பாகும் எனவும் ரசிகர்கள் கணித்துள்ளனர்.

  தமிழ் சினிமாவில் புதுமை இயக்குனர் ஸ்ரீதர் அமைத்த ட்ரெண்ட் செட்..!

  இதுவரை சத்யாவை பற்றி தெரிந்து கொள்ள வருணுக்கு வாய்ப்பு கிடைத்தது இல்லை. இந்த முறை வருண், சத்யாவுடன் இருந்து அவரை பற்றி தெரிந்து கொண்டு இருவரும் மீண்டும் சேர்வார்கள், இப்படி தான் திரைக்கதை செல்லும் எனவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். என்ன நடக்கும் ? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: TV Serial, Vijay tv