Home /News /entertainment /

வருண் - சத்யாவை பிரிக்க நினைத்த ஷீலா.. கடைசியில் நடந்த அதிரடி ட்விஸ்ட்!

வருண் - சத்யாவை பிரிக்க நினைத்த ஷீலா.. கடைசியில் நடந்த அதிரடி ட்விஸ்ட்!

மெளன ராகம் 2

மெளன ராகம் 2

மெளன ராகம் 2வில் சத்யாவை சென்னைக்கு அழைத்து செல்ல காத்துக் கொண்டிருக்கிறார் வருண்

    மெளன ராகம் சீரியலில் இன்றைய எபிசோடில் சத்யா - வருணை பிரிக்க நினைத்த ஷீலாவுக்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்துக் கொண்டிருக்கிறது.

    சொந்த அண்ணன் மகன்களான வருண், தருண் இருவரின் வாழ்க்கையும் நல்லா இருக்க கூடாது என்பதே ஷீலாவின் ஆசை. அதற்காக எந்த அளவுக்கும் செல்வார். இருவருவரின் வாழ்க்கை விஷயத்திலும் தலையிட்டு பல பிரச்சனைகளை செய்து வருகிறார். இவருக்கு ஸ்ருதியும் துணையாக நிற்கிறார். இந்நிலையில், இன்று ஷீலாவின் ஆட்டத்துக்கு முடிவு கட்டுகிறார் அவரின் அண்ணன் மனோகர். அதுமட்டுமில்லை இனிமேல் வருண் - சத்யா விஷயத்தில் தலையிடவே கூடாது என்றும் ஆர்டர் போடுகிறார். இந்த ஷாக்கை ஷீலாவால் தாங்கி கொள்ள முடியவில்லை.

    கல்யாண விஷயத்தில் அவளை ஏமாத்திட்டாங்க.. பிரபல சீரியல் நடிகைக்காக கண்ணீர் விட்டு கதறிய ஸ்ரீநிதி!

    அவசரப்பட்டு சத்யாவை வெளியே அனுப்பி விட்டோம் என்ற சோகத்தில் சத்யாவின் வாழ்க்கை கதையை தேடி குற்றாலம் சென்றார் வருண். இந்த விஷயம் வீட்டில் இருக்கும் யாருக்கும் தெரியாது. சத்யாவின் மாமா பழனி வீட்டில் தங்கியவர் சத்யா, மல்லிகா, கார்த்திக் கிருஷ்ணா பற்றி தெரிந்து கொண்டார். அந்த நேரத்தில் தான் சத்யா தாண்டிக்குளத்தில் இருப்பது பழனிக்கு தெரிய வருகிறது. உடனே அவரை அழைத்துக் கொண்டு சத்யாவை பார்க்க புறப்பட்டார். ஆனால் அதற்குள் ஷீலாவும் ஸ்ருதியும் அனுப்பிய விவாகரத்து நோட்டீஸ் சத்யா வீட்டுக்கு வர, துடித்து போகிறார் சத்யா.

    அப்போது தான் வருண் அங்கு வந்து சேர்கிறார். தனது மகளின் வாழ்க்கை வீணாகிவிட்டது என்ற கோபத்தில் வருணை திட்டி தீர்க்கிறார் மல்லிகா. விஷயம் தெரிந்த வருண் உடனே தருணுக்கு ஃபோன் செய்து திட்டுகிறார். அப்போது ஷீலா டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்பியது மனோகருக்கும் தெரிய வருகிறது. அவரை கண்டப்படி திட்டுகிறார் மனோகர். தருணும் அத்தையை திட்டு விடுகிறார். இனிமேல் வருண் விஷயத்தில் ஷீலாவால் தலையிட முடியாது.

    கமல்ஹாசனின் விக்ரம் படம் தமிழகத்தில் இதுவரை செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?

    இப்படி இருக்கையில், சத்யாவை அழைத்துக் கொண்டு தான் சென்னைக்கு செல்வேன் என அடம் பிடிக்கிறார் வருண். அவருக்கு உதவியாக சத்யாவின் உறவினர் நிற்கிறார்., சத்யா இருக்கும் ஊரிலே தங்கி அவரை புரிய வைத்து சென்னைக்கு அழைத்து செல்ல காத்துக் கொண்டிருக்கிறார் வருண். இருவரும் எப்போது சேர்வார்கள் என்பதை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் இருக்கின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி