ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சத்யாவுடன் சேர துடிக்கும் வருண்.. வில்லியாக மாறி பிரிக்கும் ஸ்ருதி!

சத்யாவுடன் சேர துடிக்கும் வருண்.. வில்லியாக மாறி பிரிக்கும் ஸ்ருதி!

மெளன ராகம்

மெளன ராகம்

மெளன ராகம் சீரியலில் பழனி வைத்திருக்கும் டெஸ்டில் எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என நினைக்கிறார் வருண்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

மெளன ராகம் சீரியலில் சத்யாவுடன் சேர வருணுக்கு இறுதி வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. ஆனால் அதையும் சொதப்பி விட பிளான் போடுகிறார் வில்லி ஸ்ருதி.

மெளன ராகம் சீரியலை பொறுத்தவரையில் சத்யாவுடன் வருண் சேர போகும் நாளுக்காக தான் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த சீரியலின் மிகப் பெரிய வெற்றிக்கு காரணமே இவர்களின் கெமிஸ்ட்ரி தான். சத்யா பற்றிய மொத்த உண்மையும் இப்போது வருணுக்கு தெரிந்து விட்டது. சத்யாவை அப்படியே ஏற்றுக் கொள்ள வருண் தயாராக இருக்கிறார். ஆனால் சத்யாவின் மாமா பழனி,  வருணுடன் சத்யாவை அனுப்புவதாக இல்லை. இதற்கு முக்கியமான காரணம் விவாகரத்து நோட்டீஸ் தான். ஆனாலும் பழனி, மல்லிகா, சத்யாவின் மனதை மாற்ற தினம் தினம் வருண் போராடுகிறார் வருண். இதை கேள்விப்பட்டு தருணும் ஸ்ருதியும் இப்போது தாண்டிக்குடிக்கு வந்து இருக்கின்றனர்.

பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் திருமணம் இந்த காரணத்தினால் நின்றதா?

இவர்கள் சத்யா - வருணை சமாதானம் செய்து அழைத்து வருவதாக தான் மனோகரிடம் சொல்லிவிட்டு கிளம்பினர். ஆனால் ஸ்ருதி இங்கேயே சத்யாவின் கதைக்கு முடிவு கட்ட வேண்டும் என்ற பிளானுடன் தான் கிளம்பி வந்து இருக்கிறார். இந்த நேரத்தில் தான் சத்யாவுக்கும் வருண் மீது காதல் இருக்கிறது என்பதை பழனி தெரிந்து கொண்டார். இதனால் வருணுக்கு ஒரு டெஸ்ட் வைக்கிறார். அதாவது சத்யா போல் பாடி காட்டினால் போதும் என்கிறார். இதற்கு காரணம் ஷீலாவும் ஸ்ருதியும் தான். அவர்கள் பழனியிடம் சத்யாவை மட்டமாக பேச, அதற்கு பதிலடி கொடுக்க வருணுக்கு டெஸ்ட் வைக்கிறார் பழனி.

நான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.. ஷாக் கொடுத்த பிக் பாஸ் ஷெரின்!

இன்றைய எபிசோடில் மனோகரும் ஷீலாவும் ஊருக்கு கிளம்புகின்றனர். அதற்கு முன்பு சத்யாவிடம் பேசிவிட்டு செல்கின்றனர். அதுமட்டுமில்லை மனோகர், வருணுக்கு பணத்தை செலவுக்காக  காரில் வைத்து செல்கிறார். இரவு வழக்கம் போல் வருணுக்காக பாட்டு பாடுகிறார் சத்யா. இந்த பக்கம் தருணையும் ஸ்ருதியையும் சத்யாவின் அத்தை பார்த்து விடுகிறார். வழக்கம் போல் அவரிடம் சண்டைக்கு போகிறார் ஸ்ருதி.

பழனி வைத்திருக்கும் டெஸ்டில் எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என நினைக்கிறார் வருண். ஆனால் இதோடு வருணை பிரித்து சென்னைக்கு அழைத்து செல்ல வேண்டும் என நினைக்கிறார் ஸ்ருதி. யார் ஜெயிப்பார்கள்? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial, Vijay tv