Home /News /entertainment /

சத்யாவுக்கு வந்த ஆபத்து.. வருணை வில்லனாக மாற்றிய ஸ்ருதி!

சத்யாவுக்கு வந்த ஆபத்து.. வருணை வில்லனாக மாற்றிய ஸ்ருதி!

மெளன ராகம்

மெளன ராகம்

மெளன ராகத்தில் வருணுக்கும் சத்யாவுக்கும் சண்டை வர சத்யா வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்

    மெளன ராகம் 2 சீரியலில் வருண் மீது மிகுந்த கோபத்தில் இருந்த சத்யா, பேக்கை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார். இது தான் சரியான வாய்ப்பு என புரிந்து கொண்டா ஸ்ருதி, வில்லத்தனத்தால் வருணை சத்யாவுக்கு எதிராக திருப்பி விடுக்கிறார்.

    முதல் பாகத்திற்கு அப்படியே எதிர்மறையாக மெளன ராகம் சீசன் 2 சீரியல் பயணிப்பது ரசிகர்களுக்கு பிடித்துள்ளது. காதல், ரொமான்ஸ் ஒருபக்கம் இருந்தாலும், தற்போது ஸ்ருதியின் வில்லத்தனத்தால் சீரியல் ட்விஸ்டுக்கு மேல் ட்விஸ்டில் பறந்து கொண்டிருக்கிறது.
    அதுவும் சத்யா தான், மல்லிகாவின் மகள் சக்தி என்ற உண்மை தெரிந்ததில் இருந்து ஸ்ருதியின் சுயரூபம் வெளியே தெரிய தொடங்கி விட்டது. ஷீலாவுடன் சேர்ந்து வருண் - சத்யாவை பிரிக்க நினைத்த ஸ்ருதி, அதில் வெற்றியும் கண்டுவிட்டார்.
    ஆரம்பத்தில் தருண் சத்யாவை காதலிக்க, தருணின் அண்ணன் வருணுக்கும் சத்யாவுக்கும் திருமணம் நடக்கிறது. ஆனால் தருண் தன்னை காதலித்த விஷயம் சத்யாவுக்கே தெரியாது.

    RRR படத்தை விடுங்க..1990ல் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த ’வைஜெயந்தி ஐ.பி.எஸ்’ பற்றி தெரியுமா?

    இதுதான் உண்மை, ஆனால் இதை அப்படியே தலைகீழாக சொல்லி, வருணை ஏமாற்றுகிறார் ஸ்ருதி. அதாவது சத்யாவும் தருணும் காதலித்ததாக, அதன் பின்பு தான் வருண் சத்யாவை திருமணம் செய்துக் கொண்டதாக மிகப் பெரிய பொய் சொல்லி வீட்டில் குழப்பத்தை ஏற்படுத்துகிறார். இதனால் வருணுக்கும் சத்யாவுக்கும் சண்டை வர சத்யா வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். கல்யாணம் ஆனதில் இருந்து, ஸ்ருதி இதை சொல்லி தான் தருணை மிரட்டி வந்தார். முதலில் மிரட்டி தருணை திருமணம் செய்துக் கொண்டார். விருப்பம் இல்லையென்றாலும், ஸ்ருதி ஏதாவது வில்லத்தனம் செய்து விடுவாள் என்ற பயத்தில் சூழ்நிலை கைதியாகி விடுகிறான் தருண். இதனால் தனக்கு தோணும் போதெல்லாம் தனது காதல் கணவன் தருணை மிரட்டி அடிபணிய வைக்கிறாள் ஸ்ருதி.

    தமிழ் சினிமாவின் பாசக்கார அம்மா … நடிகை சரண்யா பொன்வண்ணன் பிறந்தநாள் ஸ்பெஷல்!

    இவ்வளவு நாளா, ஸ்ருதி கெட்டவள் என்று நினைத்து தருண் ஒதுங்கியே இருந்தார், ஆனால் வருண் - சத்யா விஷயத்தில் பிரச்சனை வந்தது, வருணை பேசி சமாதானம் செய்ய ஸ்ருதியை தூது அனுப்புகிறார் தருண். ஆனால் ஸ்ருதி தான் சத்யா வீட்டை விட்டு போக காரணம் என்பது தருணுக்கு தெரியாது.

    இன்றைய எபிசோடில் ரோட்டில் நிற்கும் சத்யாவுக்கு டி.ஜி.பி அடைக்கலம் கொடுக்கிறார். அவரின் வீட்டில் சத்யாவை தங்க வைக்கிறார்.டி.ஜி.பியின் பேத்தியுடன் சத்யா க்ளோஸ் ஆகிவிடுகிறார். இந்த பக்கம் கார்த்திக் கிருஷ்ண, சத்யாவின் பிரச்சனையை நினைத்து கவலைக் கொள்கிறார். அவரை வழக்கம் போல் காதம்பரி அம்மா நக்கல் செய்ய, கோபத்தில் கார்த்திக் கிருஷ்ணா வார்னிங் கொடுக்கிறார். ஆனால் சத்யாவுக்கு சப்போர்ட் செய்து, ஸ்ருதி வாழ்க்கையில் நீங்கள் தலையிட கூடாது என்கிறார் காதம்பரி.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி