Home /News /entertainment /

வருண் - சக்திக்கு வில்லனாகும் தருண்? மெளன ராகம் சீரியலில் அடுத்து வரும் அதிரடி திருப்பம்!

வருண் - சக்திக்கு வில்லனாகும் தருண்? மெளன ராகம் சீரியலில் அடுத்து வரும் அதிரடி திருப்பம்!

மெளன ராகம்

மெளன ராகம்

ஸ்ருதியின் பேச்சை கேட்டு தருண், வருண் - சக்திக்கு எதிராக மாறுவது தான் சீரியலின் அடுத்தக்கட்டம்

    மெளன ராகம் சீரியலில் வரும் நாட்களில் அதிரடி திருப்பங்கள் அரங்கேற இருப்பதாக தகவல்கள் இணையத்தில் பரவி வருகின்றன.

    பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கும் மெளன ராகம் சீரியல்  நாளுக்கு நாள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. சக்தியை  காப்பாற்ற கார்த்திக் கிருஷ்ணா முயற்சித்து அதனால் கத்தி குத்து வாங்கி ஆஸ்பிட்டலில் அட்மிட் ஆனார். சக்தியை கொலை செய்ய காதம்பரி ஏற்பாடு செய்த ஆள் தான் மாறி கார்த்திக் கிருஷ்ணாவை குத்தி விடுகிறார். இது ஒருபுறம் இருக்க, இப்போது கார்த்திக் கிருஷ்ணா சக்தி வீட்டில் இருக்கிறார். அதாவது காதம்பரியும் ஸ்ருதியும் கார்த்திக்கை சென்னை அழைத்து செல்ல நினைத்தனர்.

    பிரபல சீரியலில் வில்லியாக என்ட்ரி கொடுக்கும் வில்லாதி வில்லி வந்தனா!

    ஆனால் கார்த்திக் கிருஷ்ணா சக்தி, மல்லிகாவுடன் இருக்க ஆசைப்பட்டார். அதனால் அவரை சக்தி அழைத்து செல்கிறார். சக்திக்கு முழு ஆதரவாக நிற்கிறார் வருண். கதை இப்படி சென்றுக் கொண்டிருக்க ஸ்ருதியின் பேச்சை தருண் கேட்க ஆரம்பித்து விட்டார். ஸ்ருதியின் நடிப்பால் தருணுக்கு இப்போது சக்தி மற்றும் வருண் மீது கோபம் வருகிறது. அவர் கொஞ்சம் கொஞ்சமாக ஸ்ருதி, காதம்பரி, பக்கம் சாய தொடங்கி விட்டார்.

    விஜய் டிவி சீரியல் நடிகையை இன்ஸ்டாவில் ஃபாலோ செய்யும் ஏ.ஆர் ரகுமான்!



    இந்த விஷயம் சென்னையில் இருக்கும் மனோகர், ஷீலாவுக்கு தெரியாது. இப்படி இருக்கையில் தற்போது சீரியலின் அடுத்த கட்டம் குறித்த தகவல் இணையத்தில் பரவி வருகிறது.

    அதாவது, ஸ்ருதியின் பேச்சை கேட்டு தருண், வருண் - சக்திக்கு எதிராக மாறுவது தான் சீரியலின் அடுத்தக்கட்டம் என கூறப்படுகிறது. அதாவது தன்னை  கார்த்திக் கிருஷ்ணா வெறுப்பது போல் பொய்யான பிம்பத்தை ஸ்ருதி ஏற்படுத்தி விட்டார். வருணும் ஸ்ருதியிடம் சண்டைக்கு போவது தருணுக்கு பிடிக்கவில்லை. இதனால் அவர் வருண் - சக்திக்கு எதிராக மாறுவார். கதை இன்னும் சூடுப்பிடிக்கும், தம்பி - அண்ணன் பிரியும் சூழ்நிலை விரைவில் வரும் என கூறப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Television, TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி