மெளன ராகம் சீரியலில் ரசிகர்கள் எதிர்பார்த்த அந்த நிகழ்வு. சத்யா - வருண் சேரும் அந்த நெகிழ்ச்சியான தருணம் இன்றைய எபிசோடில் ஒளிப்பரப்பாகவுள்ளது.
மெளன ராகம் 2 சீரியலில் 2 மாதமாக பிரிந்து இருந்த சத்யாவும் வருணும் இன்றைய எபிசோடில் சேர போகிறார்கள். சத்யா பற்றிய எல்லா உண்மையும் தெரிந்து கொள்ள குற்றாலம் சென்றார் வருண். அங்கு சத்யாவின் மாமா பழனி வீட்டில் தங்கி சத்யாவின் குழந்தை பருவம் பற்றி தெரிந்து கொள்கிறார். உடனே சத்யாவுடன் சேர வேண்டும் என துடிக்கிறார். ஆனால் ஸ்ருதி - ஷீலா செய்த சதியால், சத்யா மாமா பழனிக்கு வருண் மீது கோபம் வருகிறது. இதனால் சத்யாவை உன்னுடன் அனுப்ப மாட்டேன் என்றார்.
ரோஜா சீரியல் ரசிகர்களுக்கு ஹீரோயின் பிரியங்கா கொடுத்த ஷாக்!
இதனால் வருண், சத்யா ஊரிலே தங்கி போராடி கடைசியில் பழனி மனசில் இடம் பிடிக்கிறர். அப்போது தான் பழனி, வருணுக்கு பாட்டு போட்டி ஒன்றை சவாலாக கொடுக்கிறார். சத்யாவுடன் சேர்ந்து 30 நிமிடம் பாடினால் போதும் உங்களை சேர்த்து வைக்கிறேன் என்கிறார். இந்த சவாலை வருணும் ஏற்றுக் கொள்கிறார். முதல் முறை வருணுக்கு ஸ்ருதி பாட்டு சொல்லி கொடுக்கிறார். அதனால் வருண் தோற்று விடுகிறார். ஆனால் இரண்டாவது முறை அவருக்கு உதவ கார்த்திக் கிருஷ்ணா வருகிறர். அவர் வருணுடன் தங்கி சங்கீதம் சொல்லிக் கொடுக்கிறார்.
அவரிடம் பயிற்சி பெற்ற வருண் மேடை ஏறுகிறார். ஆரம்பத்தில் எல்லோரும் வருணால் பாட முடியாது என நினைத்தனர். ஆனால் கார்த்திக் கிருஷ்ணா கொடுத்த பயற்சியால் தைரியமாக வருண் பாடுகிறார். சத்யாவின் ஃபேவரெட் பாடலான ’நான் ஒரு வானம்பாடி’ பாடலை சத்யா - வருண் இருவரும் மேடையில் பாடுகின்றனர். இதை பார்க்க சென்னையில் இருந்து மனோகர், ஸ்ருதி, தருண், ஷீலா எல்லோரும் வந்துள்ளனர். கிட்டத்தட்ட ஊரில் இருக்கும் எல்லோரும் வருண் தோற்று விடுவார் என நினைத்தனர்.
காதலுக்கு மரியாதை.. புது ஜோடி நவீன் - கண்மணி செய்த காரியம்!
அங்கு தான் ட்விஸ்டே, வருண் சத்யாவுடன் 30 நிமிடம் தொடர்ந்து பாட மொத்த ஊருருக்கும் ஷாக் தாங்கல. கார்த்திக் கிருஷ்ணாவுக்கு சந்தோஷம். தம் கட்டி பாடிய வருண், கடைசியில் ஜெயித்து விட்டார். பழனி எழுந்து நின்று வருணுக்காக கை தட்டுகிறர். இதை பார்த்து சத்யாவுக்கு அழுகை வர, உடனே வருணை கட்டி பிடித்து கொள்கிறார். மொத்தத்தில் சத்யாவும் வருணும் சேர்ந்து விடுகின்றனர். இதை பார்த்து மல்லிகா கண்ணீர் விடுகிறார்.
ஆனால் இந்த ட்விஸ்ட்டை எதிர்பார்க்காத ஷீலா ,ஸ்ருதி பொங்குகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.