தான் சத்யாவை காதலித்த விஷயத்தை வருணிடம் சொல்லத் தயாராகிறான் தருண். இதனால் ஸ்ருதி அதிர்ச்சியில் உறைந்திருக்கும் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.
மெளன ராகம் முதல் பாகத்திற்கு அப்படியே எதிர்மறையாக மெளன ராகம் சீசன் 2 சீரியல் பயணித்துக் கொண்டிருக்கிறது. காதல், ரொமான்ஸ் ஒருபக்கம் இருந்தாலும், தற்போது ஸ்ருதியின் வில்லத்தனம் சீரியலை அதிகம் ரசிக்க வைக்கிறது. அதுவும் சத்யா தான், மல்லிகாவின் மகள் சக்தி என்ற உண்மை தெரிந்ததில் இருந்து ஸ்ருதியின் சுயரூபம் வெளியே தெரிய தொடங்கி விட்டது.
கார்த்திக் கிருஷ்ணாவின் முதல் மனைவி மல்லிகாவுக்கு பிறந்த சத்யா, இரண்டாவது மனைவி காதம்பரிக்கு பிறந்த ஸ்ருதி இருவரும் தான் இந்த சீரியலின் ஹீரோயின் மற்றும் வில்லி. தருண் சத்யாவை காதலிக்க, தருணின் அண்ணன் வருணுக்கும் சத்யாவுக்கும் திருமணம் நடக்கிறது. ஆனால் தருண் தன்னை காதலித்த விஷயம் சத்யாவுக்கே தெரியாது.
4 கார் இருக்கும் போது எதுக்காக சைக்கிள்ல போனீங்க? நெல்சன் கேள்விக்கு விஜய் சொன்ன பதில்!
இந்த விஷயத்தை அறிந்த ஸ்ருதி, இதனை வருணிடம் சொல்லி விடுவேன் என மிரட்டி தருணை திருமணம் செய்துக் கொள்கிறாள். விருப்பம் இல்லையென்றாலும், ஸ்ருதி ஏதாவது வில்லத்தனம் செய்து விடுவாள் என்ற பயத்தில் சூழ்நிலை கைதியாகி விடுகிறான் தருண். இதனால் தனக்கு தோணும் போதெல்லாம் தனது காதல் கணவன் தருணை மிரட்டி அடிபணிய வைக்கிறாள் ஸ்ருதி. சத்யா யார்? அவளை ஏன் இந்த குடும்பமே கொண்டாடுகிறது என்ற தேடலில் இருந்த ஸ்ருதிக்கு, சத்யாவின் அம்மா மல்லிகா என்பதும் அவர்கள் தனது அப்பாவின் மூத்த தாரமும், பிள்ளையும் என்பது தெரிய வருகிறது.
பீஸ்ட் ட்ரெய்லருக்கே இந்த கூட்டமா? - அசந்துபோன திரையரங்கு!
சும்மாவே வில்லத்தனம் செய்யும் ஸ்ருதிக்கு இப்படி அல்வா போலொரு விஷயம் கிடைத்தால் சும்மா விடுவாளா? தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், “ஸ்ருதி தயவு செஞ்சு சக்திக்கு எந்த கெடுதலும் பன்ணிடாத” என கையெடுத்து கும்பிட்டு கேட்டுவிட்டு அழுதுக் கொண்டே செல்கிறார் மல்லிகா. இதைப் பார்த்த தருண் நேராக ரூமுக்கு வந்து ஸ்ருதியிடம், “ஆண்டி ஏன் அழுதுட்டு போறாங்க?” என்கிறான். அதற்கு, “உங்களுக்கு இன்னும் உங்க முன்னாள் காதலியை மறக்க முடியல. அவ அம்மா அழுதா உங்களால தாங்கிக்க முடியல” என அவனைக் கோபப்படுத்துகிறாள் ஸ்ருதி. இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. அப்போது நான் வருணிடம் எல்லாத்தையும் சொல்லிவிடுவேன், என ஸ்ருதி மிரட்ட ‘ஏய் நீ என்னடி சொல்றது, நானே வருண் கிட்ட எல்லாத்தையும் சொல்றேன்’ என அங்கிருந்து நகர்கிறான் தருண். அதிர்ச்சியில் உறைந்திருக்கிறாள் ஸ்ருதி.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.