மெளன ராகம் 2 சீரியலின் இன்றைய எபிசோடில் சத்யாவை மிரட்டிய ஸ்ருதிக்கு தகுந்த பதிலடி கொடுக்கிறார் வருண். இந்த அதிர்ச்சியை தாங்கி கொள்ள முடியாமல் காதம்பரிக்கு ஃபோன் செய்து புலம்புகிறார் ஸ்ருதி.
விஜய் டிவி சீரியல்களில் டாப் டி.ஆர்.பி ரேட்டிங்கில் பாக்கியலட்சுமி சீரியலுக்கு அடுத்தப்படியாக இருப்பது மெளன ராகம் 2 சீரியல் . சத்யா - வருண் - ஸ்ருதி இந்த 3 கதாபாத்திரங்கள் தான் இந்த சீரியலின் மிகப் பெரிய பலம். இந்த சீரியலுக்கு கிடைத்திருக்கும் வரவேற்பை பொறுத்து இந்த வாரம் முழுவதும் மெளன ராகம் சீரியல் 1 மணி நேர ஸ்பெஷல் எபிசோடாக ஒளிப்பரப்பாகி வருகிறது. அந்த வகையில் இன்றைய எபிசோடும் பரபரப்புக்கு ட்விஸ்டுக்கு பஞ்சமில்லாமல் நகர்கிறது.
கடைசியில் இப்படி ஆயிடுச்சே.. ’விக்ரம்’ படம் குறித்து புலம்பிய ரசிகருக்கு ஷிவானி சொன்ன பதில்!
சத்யாவுக்காக வருண் தாண்டிக்குடியில் கஷ்டப்படுகிறார். மனோகரும் ஷீலாவும் வந்து பேசிய பின்பு கூட வருண் அவர்களுடன் செல்லவில்லை. இப்படி இருக்கையில், வருணை சென்னைக்கு அழைத்து செல்ல ஸ்ருதியும் தருணும் சத்யாவின் வீட்டுக்கு வருகிறார்கள். எப்படியாவது சத்யா - வருணை பிரிக்க நினைக்கும் ஸ்ருதி சண்டையை பெரிதாக்குகிறார். சண்டையில் சத்யாவை கொன்று விடுவேன் என மிரட்டுகிறார். இதை வருண் கேட்டு விடுகிறார்.
விஜய் டிவி பிரியங்கா வீட்டில் நடந்த சுப நிகழ்வு.. வாழ்த்துக்களை பகிரும் ரசிகர்கள்!
வழக்கம் போல் இந்த முறை வருண் அமைதியாக இருக்கவில்லை. ஸ்ருதியிடம் சண்டைக்கு போகிறார். சத்யாவை பார்த்து நீ எப்படி கொலை செய்வேன் என்று சொல்வாய் என கோபத்தில் கத்துகிறார். ஸ்ருதி எவ்வளவு சொல்லியும் வருண் கோபத்தை அடக்கவில்லை பதிலுக்கு உன்னை பற்றி எல்லா உண்மையும் எனக்கு தெரியும் என அதிர்ச்சி தகவலை சொல்கிறார். இதை கேட்டு ஷக்கான ஸ்ருதி உடனே காதம்பரிக்கு ஃபோன் செய்கிறார்.
தாண்டிக்குடியில் நடந்த எல்லாவற்றையும் சொல்லி காதம்பரியிடம் ஐடியா கேட்கிறார். அதுமட்டுமில்லை சத்யாவின் மாமா பழனி பற்றியும் சொல்கிறார். இதை கேட்ட காதம்பரி மல்லிகாவின் மொத்த குடும்பத்தையும் கொலை செய்யும்படி சத்யாவிடம் சொல்கிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.