Home /News /entertainment /

சக்தி கண்டுப்பிடிக்கும் உண்மை.. மெளன ராகத்தில் ஸ்ருதிக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!

சக்தி கண்டுப்பிடிக்கும் உண்மை.. மெளன ராகத்தில் ஸ்ருதிக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!

மெளன ராகம்

மெளன ராகம்

மெளன ராகம் கதை போற போக்கை பார்த்தால் இந்த 2 நாளில் சக்தி, கார்த்திக் கிருஷ்ணாவை குத்திய நபரை கண்டுப்பிடித்து விடுவார் போல.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    மெளன ராகம் சீரியலில் இன்றைய எபிசோடில் கார்த்திக் கிருஷ்ணா மீண்டும் காதம்பரி வீட்டுக்கு வருகிறார். அவருடன் சக்தி, வருண், சொர்ணமும் வீட்டுக்கு வருகிறார்கள்.

    மெளன ராகம் சீரியல் பரபரப்பான திருப்பங்களுடன் ஒளிப்பரப்பாகி வருகிறது. இத்தனை நாட்களாக கார்த்திக் கிருஷ்ணா தாண்டிக்குடியில் இருந்தார். ஆனால் காதம்பரிக்கு உடம்பு சரியில்லாத காரணத்தினால் சக்தி,  கார்த்திக் கிருஷ்ணாவை சென்னைக்கு அழைத்து வந்துள்ளார். அவருடன் சொர்ணம் அத்தை, வருணும் வந்து இருக்கிறார்கள். 2 நாளைக்கு மட்டும் தான் என கூறி  கார்த்திக் கிருஷ்ணாவை சென்னைக்கு அழைத்து வந்துள்ளனர். ஆனால் ஸ்ருதி, நிரந்தரமாக அப்பாவை இங்கே வைத்துக் கொள்ள வேண்டும் என நினைக்கிறார். இது வருணுக்கும் சக்திக்கும் தெரியாது.

    சின்சியாரிட்டிக்கு மறுபெயர் ஆல்யா.. . சொன்னது யார் தெரியுமா?

    இப்படி இருக்கையில் சென்னைக்கு சக்தி வந்து இருக்கும் இந்த நேரத்தில் கார்த்திக் கிருஷ்ணாவை கத்தியால் குத்திய நபரும் ருக்குமணியை பார்க்க காதம்பரி வீட்டுக்கு வருகிறார். அவர் ருக்குமணியை மிரட்டி பணம் கேட்கிறார். அவரும் யாருக்கும் தெரியாமல் பணத்தை எடுத்து வந்து தருகிறார். இந்த நேரத்தில் தான் சக்தி, காரில் வரும் போது அந்த நபரை தற்செயலாக பார்க்கிறார். ஆனால் அந்த நபர் ஹெல்மெட் போட்டுக் கொள்கிறார். அதனால் அவரால் முகத்தை பார்க்க முடியவில்லை. அதே நேரம் சக்திக்கு சந்தேகம் வந்து விட்டது.

    தனுஷ் படத்தில் நடிக்கும் சூப்பர் சிங்கர் பிரபலம்.. கடைசி நேரத்தில் கொடுத்த சர்ப்ரைஸ்!

    கதை போற போக்கை பார்த்தால் இந்த 2 நாளில் சக்தி, கார்த்திக் கிருஷ்ணாவை குத்திய நபரை கண்டுப்பிடித்து விடுவார் போல. ஒருவேளை அது நடந்தால் இந்த அதிர்ச்சியை ஸ்ருதியால் தாங்கி கொள்ள முடியாது. காரணம் இப்போது தான் தருண், ஸ்ருதி குடும்பத்தை நம்ப ஆரம்பித்து இருக்கிறார். அவர்களுக்காக பேசுகிறார். இந்த நேரத்தில் ஸ்ருதியின் நிஜ முகம், காதம்பரி ருக்குமணி பற்றிய உண்மை எல்லாம் தெரிந்தால் மறுபடியும் தருண் இவர்களை விட்டு பிரிந்து விடுவார். இதனால் சக்தி கண்டுப்பிடிக்கும் உண்மை ஸ்ருதிக்கு மிகப் பெரிய அதிர்ச்சியையும் பிரச்சனையையும் தர போகிறது. அடுத்து என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி