ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

கடைசி வரை ஸ்ருதிக்கு ஒரு நல்லது கூட நடக்காது போல! மெளன ராகம் சீரியலில் நின்ற கல்யாணம்

கடைசி வரை ஸ்ருதிக்கு ஒரு நல்லது கூட நடக்காது போல! மெளன ராகம் சீரியலில் நின்ற கல்யாணம்

மெளன ராகம்

மெளன ராகம்

மெளன ராகம் சீரியலின் கதைக்களம் வேற மாதிரி இருந்த நிலையில், வருண் - சத்யா திருமணத்திற்கு பிறகு டோட்டலாக சீரியலின் ரூட்டே மாறியது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  மெளன ராகம் 2 சீரியலில் ஸ்ருதி - தருண் கல்யாணம் நிற்பது உறுதியாகி விட்டது. தவளை தன் வாயாலே கெடும் கதையாக, ஸ்ருதியே சத்யாவுக்கு ஃபோன் செய்து உண்மையை உலறி கடைசியில் திருட்டு கல்யாணம் நின்று விடுகிறது.

  விஜய் டிவியில் ஒளிப்பரப்பான மெளன ராகம் சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து மௌன ராகம் 2 சீரியல் உருவானது. பரபரப்பான கதைக்களத்துடன் செல்லும் இந்த தொடருக்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு உள்ளது.முதல் பாகத்தில் முழுக்க முழுக்க குழந்தைகளை கவரும் வகையில் திரைக்கதை பயணித்து கொண்டிருந்தது. அப்பாவான கார்த்திக் கிருஷ்ணாவின் பாசத்திற்காக சக்தி ஏங்கி கொண்டிருந்தார். ஆனால் ஒருநாள் எல்லா உண்மைகளும் தெரிய வர, சக்தியும் மல்லிகாவும் கார்த்திக் கிருஷ்ணாவை பிரியும் சூழ்நிலை ஏற்பட்டது.

  இதையும் படிங்க.. கலர்ஸ் தமிழில் புத்தம் புது சீரியல்.. சாயா சிங் நடிப்பில் நம்ம மதுரை சிஸ்டர்ஸ் !

  இது அப்படியே தொடர்ந்து தற்போது 2வது பாகம் ஒளிப்பரப்பாகி வருகிறது. முதல் பாகத்தில் சக்தியாக குழந்தை நட்சத்திரம் கிருத்திகா நடிப்பு பலரின் பாராட்டுக்களை பெற்ற நிலையில், சக்தி வளர்ந்ததாக கதையின் ஸ்டோரி லைன் மாறியது. இப்போது சத்யாவாக ரவீனா நடித்து வருகிறார். இவரும் வெள்ளித்திரையில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தவர் தான்.

  இதையும் படிங்க.. குக் வித் கோமாளி சீசன் 3ல் இணைந்த சூப்பர் சிங்கர் பரத் பற்றி உலா வரும் கருத்துக்கள்! உண்மை என்ன?

  இவருக்கு ஜோடியாக சல்மான் நடிக்கிறார். ஆரம்பத்தில் இந்த சீரியலின் கதைக்களம் வேற மாதிரி இருந்த நிலையில், வருண் - சத்யா திருமணத்திற்கு பிறகு டோட்டலாக சீரியலின் ரூட்டே மாறியது. இவர்கள் இருவருக்கும் இடையில் அரங்கேறும் ரொமான்ஸ் காட்சிகள் இணையத்தில் படு வைரல். இந்நிலையில் பல போரட்டங்களுக்கு பிறகு சத்யாவும் வருணும் சேர்ந்து வாழ தொடங்கி விட்டனர். இது வருணின் அத்தைக்கு பிடிக்கவில்லை. இவர்களை பிரிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் பல கெடுதல்களை செய்து வருகிறார். தற்போது சத்யாவை வெளியே துரத்த ஸ்ருதியின் துணை அவருக்கு தேவைப்படுகிறது.

  அதனால், ஸ்ருதி, மனோகர் வீட்டுக்கு மருமகளாக வர வேண்டும் என முடிவு எடுக்கிறார். அதற்கு வருணின் தம்பி தருணுக்கும் ஸ்ருதிக்கு திருட்டு கல்யாணம் செய்து வைக்க பிளான் செய்கிறார். ஏற்கெனவே ஸ்ருதி, தருணை காதலித்தார். ஆனால் தருண் அதை ஏற்கவில்லை. இதனால் தருணை பிளாக் மெயில் செய்து கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்கிறர். இதற்ககு ஸ்ருதியின் பாட்டி, அவரின் அம்மா காதம்பரியும் துணை.

  ஆனால் கடைசியில் கல்யாணம் நின்று போகிறது. ஸ்ருதி கண்டிப்பாக கல்யாணம் நடக்கும் என்ற தைரியத்தில் சத்யாவுக்கு ஃபோன் செய்து நக்கலாக பேச, கடைசியில் சத்யா, கார்த்திக் மற்றும் மனோகரிடம் தகவலை சொல்லி கல்யாணத்தை நிறுத்துகிறார். இந்த காட்சிகள் அனைத்தும் இன்றைய எபிசோடில் ஒளிப்பரப்பாகவுள்ளன.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Sreeja
  First published:

  Tags: TV Serial, Vijay tv