Home /News /entertainment /

ஷீலா பற்றி சக்திக்கு தெரிய வந்த மிகப்பெரிய உண்மை.. மெளன ராகத்தில் உச்சக்கட்ட திருப்பம்!

ஷீலா பற்றி சக்திக்கு தெரிய வந்த மிகப்பெரிய உண்மை.. மெளன ராகத்தில் உச்சக்கட்ட திருப்பம்!

மெளன ராகம்

மெளன ராகம்

ஸ்ருதி தந்த மாத்திரைகள், ஷீலா தினமும் கொடுக்கும் மாத்திரகளை டாக்டரிடம்  எடுத்து செல்கிறார் சக்தி.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    மெளன ராகம் சீரியலில் உச்சக்கட்ட திருப்பமாக ஷீலா செய்து வந்த மிகப்பெரிய துரோகத்தை சத்யா கண்டுப்பிடித்து விட்டார். சீரியலில் அடுத்தக்கட்டம் என்ன ? என்பது தான் ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

    மெளன ராகம் சீரியலை பொறுத்தவரையில் இப்போது திரைக்கதை டாப் கியரில் சென்றுக் கொண்டிருக்கிறது. ஒருபக்கம்  வில்லாதி வில்லன் காதம்பரியின் அப்பா என்ட்ரி கொடுத்துள்ளார். இன்னொரு பக்கம் கார்த்திக் கிருஷ்ணா காதம்பரியை வெளியில் அனுப்பி விட்டு சக்தி மற்றும் மல்லிகாவை மனைவி, மகளாக ஏற்றுக் கொண்டார். இதை ஸ்ருதி, காதம்பரியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இவ்வளவு பிரச்சனையிலும் சக்தி சந்தோஷமாக இருக்கிறார், வருண் அவர் மீது காதலை கொட்டுகிறார் என்பது ஸ்ருதியின் ஆதங்கம்.

    கணவர் வழியில் செல்லும் ஆல்யா மானசா.. சின்னத்திரையில் பரவும் அந்த விஷயம் உண்மையா?

    இதை தீர்த்துக் கொள்ள ஷீலாவுடன் சேர்ந்து பிளான் செய்கிறார் ஸ்ருதி. அதாவது வருணுக்கு தப்பான மாத்திரையை கொடுத்து அதன் மூலம் கைக்கால்களை செயலிழக்க செய்ய வேண்டும் என நினைக்கிறார். ஸ்ருதியின் இந்த தவறான செயலுக்கு சொந்த அத்தையான ஷீலாவே துணை போகிறார். ஏற்கெனவே ஷீலா மீது சக்திக்கு சந்தேகம் வந்து விட்டது. இப்படி இருக்கையில் அன்றைய தினம் சக்தி  மாத்திரகளை திறந்து பார்த்ததில் அவர் மோசமாக நடந்து கொண்டதும் சந்தேகம் உறுதியாகிவிட்டது.



    அந்த நிகழ்ச்சிக்கு செல்ல தான் சீரியலில் இருந்து விலகினாரா அர்ச்சனா?

    இப்படி இருக்கையில் ஸ்ருதி தந்த மாத்திரைகள், ஷீலா தினமும் கொடுக்கும் மாத்திரகளை டாக்டரிடம்  எடுத்து செல்கிறார் சக்தி. இது யாருக்கும் தெரியாது. மாத்திரகளை வாங்கி பார்க்கும் டாக்டர், ஷீலா கொடுப்பது தூக்க மாத்திரை என்றும் மற்றொரு மாத்திரை மிக மிக ஆபத்தான ஒன்று என்றும் கூறிவிடுகிறார். ஆக மொத்தத்தில் சக்தியின் சந்தேகம் உறுதியாகிவிட்டது. கோபத்தில் முறைத்துக் கொண்டு நிற்கிறார்.



    மெளன ராகம் சீரியலின் லேட்டஸ்ட் புரமோவை பார்த்த ரசிகர்கள் அடுத்து என்ன நடக்கும்? என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கின்றனர்.

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

     

     
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி