Home /News /entertainment /

சத்யா - மல்லிகாவை கெஞ்ச விட்டு மிரட்டும் ஸ்ருதி.. இப்படியொரு வில்லத்தனமா?

சத்யா - மல்லிகாவை கெஞ்ச விட்டு மிரட்டும் ஸ்ருதி.. இப்படியொரு வில்லத்தனமா?

மெளன ராகம் ஸ்ருதி

மெளன ராகம் ஸ்ருதி

மெளன ராகம் முதல் பாகத்திற்கு அப்படியே எதிர்மறையாக மெளன ராகம் சீசன் 2 சீரியல் பயணித்துக் கொண்டிருக்கிறது.

    மெளன ராகம் 2 சிரீயலில் ஸ்ருதியின் வில்லத்தனம் காதம்பரியை விட ஒருபடி மேலே சென்று விட்டது. பிளான் பண்ணி சத்யாவையும் மல்லிகாவையும் கையும் களவுமாக பிடிக்கிறார். மகளின் வாழ்க்கைக்காக மல்லிகா , ஸ்ருதியிடம் கெஞ்சி அழுகிறார்.

    மெளன ராகம் முதல் பாகத்திற்கு அப்படியே எதிர்மறையாக மெளன ராகம் சீசன் 2 சீரியல் பயணித்துக் கொண்டிருக்கிறது. கண்ணம்மா சீரியலில் பாரதி எப்படி, லட்சுமியை மகள் என்று ஒத்துக் கொள்ள மாட்டாரோ அதே மாதிரி தான், மெளன ராகத்தில் உண்மை தெரிந்தும் கார்த்திக் கிருஷ்ணா, சத்யா தான் என் மகள் என யாரிடமும் சொல்ல மாட்டார். ஆனால் அவரிடம் பாசமாக நடந்து கொள்வார். இது ஸ்ருதிக்கு பிடிக்கவில்லை. அதே போல் வீட்டில் எல்லோரும் மூத்த மருமகளான சத்யாவை கொண்டாடுவதும் அவருக்கு பிடிக்கவில்லை.

    பழைய சாதத்தை வைத்து சாஃப்டான சப்பாத்தி… இதையும் ஒருமுறை ட்ரை பண்ணுங்க!

    இதை கெடுக்க, பல சதிகளை செய்கிறார். இதற்கு ஷீலாவும் உடந்தை. தருண், சத்யாவை காதலித்த ஒரே ஒரு விஷயத்தை கையில் வைத்துக் கொண்டு ஸ்ருதி வீட்டில் ருத்ரதாண்டவம் ஆடி வருகிறார். சத்யாவிடம் இருந்து மியூசிக் ஸ்கூலை பறித்தது, தாலி பிரித்து கோர்க்கும் நிகழ்ச்சியை வேற நாளுக்கு மாற்ற சொன்னது, ஹனிமூன் என்ற பெயரில் பாண்டிச்சேரி வரை சென்று பாதியிலே வருவது என ஸ்ருதியின் வில்லத்தனத்தால் ஒருபக்கம், தருணை மொத்த குடும்பமும் வெறுக்கின்றனர்.

    என் பொண்ணுக்கு கல்யாணம் ஆகணும்.. வருத்தப்பட்ட ராஜா ராணி 2 அர்ச்சனா அம்மா!

    அதாவதும், இவை அனைத்தையும் ஸ்ருதி, தருண் மூலம் சாதித்துக் கொண்டார். இப்படி இருக்கையில், சத்யாவின் தாலி பிரித்து கோர்க்கும் நிகழ்ச்சிக்கு மல்லிகா வந்து இருந்தார். ஸ்ருதி வீட்டில் இல்லாததால் தான் மல்லிகாவை சத்யா வரவழைத்தார். ஆனால் ஸ்ருதி பிளான் செய்து மொத்த ஆட்டத்தையும் ஆடினார். திடீரென்று ஸ்ருதியும் தருணும் வீட்டுக்கு வர, ஸ்ருதி மல்லிகாவை பார்த்து விட்டார். ஆனால் ஸ்ருதிக்கு எல்லா உண்மையும் தெரியும் என்பது மல்லிகாவுக்கும் சத்யாவுக்கும் தெரியாது.



    ஸ்ருதி எல்லா உண்மையும் சொல்லி, சத்யாவின் வாழ்க்கையை கெடுத்து விடுவார் என நினைத்த மல்லிகா, அவரிடம் கெஞ்சி கேட்கிறார். இதை வைத்து எந்த பிரச்ச்சனையும் செய்ய வேண்டாம் என அழுகிறார். இதுக் குறித்த ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது. அதே நேரம், சீரியலை பார்க்கும் ரசிகர்கள் சத்யா ரோலை இன்னும் துணிச்சலாக எடுத்து செல்ல வேண்டும், இவ்வளவு அப்பாவியாக இருப்பது பார்க்கவே கடுப்பாக இருப்பதாக கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, TV Serial Promos, Vijay tv

    அடுத்த செய்தி