மெளன ராகம் 2 சீரியலில் சத்யா சொன்ன மொத்த உண்மையால் மனோகர் குடும்பம் அவரை வெறுத்து விட்டது. சத்யாவின் கணவராக வருண் அடுத்து என்ன முடிவு எடுப்பார்? என்பது தான் இப்போது ரசிகர்களின் அடுத்த கேள்வியாக இருக்கிறது.
மெளன ராகம் 2 சீரியலில் கடந்த வாரம் முழுவதும் பரபரப்பான திருப்பான திருப்பங்கள் அரங்கேறி வருகிறது. குழந்தை அணு தொலைந்து போக, அந்த குழந்தையை கடத்த சொன்ன காதம்பரி அம்மா சிக்கலில் மாட்டிக் கொள்கிறார். அவர் தான் குற்றவாளி என தெரிந்தும் சத்யா, அவரை காப்பாற்றுகிறார். அங்கு தொடங்கியது பிரச்சனை, இனிமேல் தன்னால் அந்த குடும்பத்திற்கு எந்த பிரச்சனையும் வேண்டாம் என நினைத்த சத்யா, அவர்கள் வீட்டை விட்டு கிளம்புகிறார்.
மே 16 முதல் கலர்ஸ் டிவி தமிழ் சேனலில் மறுஒளிபரப்பாகும் ‘கோலங்கள்’ சீரியல்.!
இந்த நேரம் பார்த்து தான், மனோகர் வீட்டுக்கு போன டிஜிபி சத்யா பற்றி வருணிடம் சொல்கிறார். சத்யாவை ஏற்றுக் கொள்ள வருண் முடிவு செய்கிறார். ஆனால் சத்யா இனி வருணுடன் சேர போவதாக இல்லை. அதே போல், கார்த்திக் கிருஷ்ணாவிடமும் பேசுவதாக இல்லை. ஊருக்கு போய் மல்லிகாவை பார்க்க வேண்டும் என முடிவு செய்கிறார். ஆனால் சத்யாவையும் வருணையும் சேர்த்து வைக்க மனோகர், ஷீலா, தருண் எல்லோரும் முயற்சி செய்கிறார்கள்.
சத்யாவை ஃபாலோ செய்து தடுத்து நிறுத்துகிறார் வருண். அப்போது கார்த்திக் கிருஷ்ணா தான் தன்னுடைய அப்பா என்ற உண்மையை சத்யா சொல்ல மொத்த குடும்பமும் அதிர்ச்சியில் உறைந்து போகிறார்கள். மனோகர் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. எல்லாவற்றையும் சொல்லிவிட்டு சத்யா அங்கிருந்து கிளம்புகிறார். வீட்டுக்கு போகும் மனோர், சத்யா பற்றி உண்மையை காதம்பரிடம் சொல்கிறார்.
கடைசியில் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகைக்கு அந்த நல்லது நடந்து விட்டது.. ரசிகர்கள் ஹாப்பி!
அவ்வளவு தான் இன்றைய எபிசோடில் வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கும் காதம்பரி கார்த்திக்கிடம் போய் சண்டை போடுகிறர். ஆனால் கார்த்திக் சத்யா தான் என மகள் என உறுதியா சொல்கிறார். இந்த பிரச்ச்னைக்கு நடுவில் வருண் செய்வதறியால நிற்கிறார். வருண் என்ன முடிவு எடுப்பார்? என்பது தான் இப்போது சீரியலின் ஹைலைட். சத்யாவை மீண்டும் போய் அழைத்து வருவாரா? என்பது வரும் வார எபிசோடில் தான் தெரிய வரும்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.