Home /News /entertainment /

மெளன ராகம் : உண்மை காதலை நிரூபிக்க இப்படியெல்லாம் செய்யணுமா?

மெளன ராகம் : உண்மை காதலை நிரூபிக்க இப்படியெல்லாம் செய்யணுமா?

மெளன ராகம்

மெளன ராகம்

சத்யாவாக ரவீனா நடித்து வருகிறார். இவரும் வெள்ளித்திரையில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தவர் தான்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மௌனராகம் சீரியலில் உண்மை காதலை நிரூபிக்க சத்யா, தனது உயிரை பணயம் வைத்து அதில் ஜெயித்தும் காட்டுகிறார்.

    விஜய் டிவியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான மெளன ராகம் சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து மௌன ராகம் 2 சீரியல் உருவானது. பரபரப்பான கதைக்களத்துடன் செல்லும் இந்த தொடருக்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு உள்ளது.முதல் பாகத்தில் சக்தியாக குழந்தை நட்சத்திரம் கிருத்திகா நடிப்பு பலரின் பாராட்டுக்களை பெற்ற நிலையில், சக்தி வளர்ந்ததாக கதையின் ஸ்டோரி லைன் மாறியது. இப்போது சத்யாவாக ரவீனா நடித்து வருகிறார். இவரும் வெள்ளித்திரையில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தவர் தான்.

    இவருக்கு ஜோடியாக சல்மான் நடிக்கிறார். ஆரம்பத்தில் இந்த சீரியலின் கதைக்களம் வேற மாதிரி இருந்த நிலையில், கார்த்திக் - சத்யா திருமணத்திற்கு பிறகு டோட்டலாக சீரியலின் ரூட்டே மாறியது. இவர்கள் இருவருக்கும் இடையில் அரங்கேறும் ரொமான்ஸ் காட்சிகள் இணையத்தில் படு வைரல். இன்ஸ்டாகிராமிலும் இவர்களின் லவ் ஸ்டேஸ்களை அதிகம் பார்க்கலாம். இளைஞர்களின் ஃபேவரெட் சீரியல் லிஸ்டிலும் மெளன ராகம் 2 உள்ளது.

    இந்நிலையில் இந்த சீரியலின் இன்றைய எபிசோடின் புரமோ வெளியாகியுள்ளது. பணத்திற்காக தான் கார்த்திக்கை சத்யா கல்யாணம்செய்து கொண்டதாக வில்லி ஷீலா பழி போட்டார். இதை நம்பி கார்த்திக்கும் சத்யாவை வெறுத்து ஒதுக்கிவிட்டார். ஆனால் இது உண்மையில்லை.. என்னுடைய காதல் உண்மை தான் என்பதை நிரூபிக்க சத்யா இடைவிடாமல் பாடும் போட்டியில் கலந்து கொள்கிறார்.



    சத்யா இதில் ஜெயிக்க கூடாது என்பதற்கு ஷீலாவும் பல கெடுதல்களை செய்கிறார். ஆனால் இது எல்லாவற்றையும் முறியடித்து சத்யா ஜெயித்து விடுகிறார். கடைசியில் மயங்கி மேடையில் விழுந்து விடுகிறார். நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு கார்த்திக் வர மொத்த அரங்கமும் அதிர்ச்சியில் நிற்கிறது. அடுத்து என்ன என்பது நாளைய எபிசோடில் தெரிந்துவிடும். உண்மை காதலை நிரூபிக்க சத்யா எடுத்த ரிஸ்க் தான் இந்த வாரம் சீரியல் டி.ஆர்.பியில் எகிற உதவியாக அமைந்துள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja Sreeja
    First published:

    Tags: Vijay tv

    அடுத்த செய்தி