Home /News /entertainment /

சத்யா பற்றிய மொத்த உண்மையும் தெரிந்து கொண்ட வருண்! அடுத்து என்ன செய்ய போகிறார்?

சத்யா பற்றிய மொத்த உண்மையும் தெரிந்து கொண்ட வருண்! அடுத்து என்ன செய்ய போகிறார்?

மெளன ராகம்

மெளன ராகம்

மெளன ராகம் சீரியலில் வருண் - சத்யா ஜோடி எப்போது சேர்வார்கள்?

    மெளன ராகம் சீரியலில் சத்யாவை பற்றிய உண்மையை தெரிந்து கொள்ள நினைத்த வருணுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி கலந்த உண்மை காத்துக் கொண்டிருக்கிறது.

    மெளன ராகம் சீரியலில் இப்போது சத்யா என்ற பெயரில் வருண் மனைவியாக வாழ்ந்து வந்த சக்தி பற்றிய உண்மை அனைவருக்கும் தெரிந்து விட்டது. அதாவது, சக்தி கார்த்திக் கிருஷ்ணாவின் மூத்த மகள் என்பது தொடங்கி சத்யா யார்? என்ற அனைத்து உண்மையும் தெரிந்து விட்டது. இந்த உண்மை எல்லாம் தெரிந்த பின்பு மனோகரால் சத்யாவை மீண்டும் மருமகளாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சிம்பத்தி காட்டி தருணிடம் நெருக்கம் ஆகிறார் ஸ்ருதி. போதாத குறைக்கு சத்யாவை பற்றி ஷீலா, தப்பு தப்பாக வீட்டில் இருப்பவர்களிடம் சொல்லி கொண்டிருக்கிறார்.

    இதையும் படிங்க.. எனக்கு அமீரை பிடிக்கும்.. மேடையில் போட்டுடைத்த பிக் பாஸ் பாவ்னி!

    இப்படி இருக்கையில், கார்த்திக் கிருஷ்ணா, வருணை அழைத்து பேசி எல்லா உண்மையும் சொல்லிவிடுகிறார். இதனால் சத்யாவை பற்றி  முழுசாக தெரிந்து கொள்ள வருண் முடிவு எடுக்கிறார். வீட்டில் பொய் சொல்லி விட்டு குற்றாலம் செல்கிறார். அங்கு தான் சத்யாவின் மாமா பழனி இருக்கிறார். இன்றைய எபிசோடில் அவரின் வீட்டுக்கு போகும் வருண், தன்னை சத்யாவின் தோழன் என அறிமுகப்படுத்திக் கொண்டு அவரின் வீட்டில் தங்குகிறார்.

    அவரிடம் சக்தி பற்றி விசாரிக்க, பழனி மல்லிகா - கார்த்திக் கிருஷ்ணா காதல் தொடங்கி சக்தி பிறந்த கதை வரை அனைத்தையும் சொல்கிறார். வருணுக்கு அதிர்ச்சி தாங்க முடியவில்லை. சத்யாவின் நிலையை நினைத்து வருந்துகிறார். இந்த பக்கம் சத்யா, எஸ்டேட்டில் வேலைக்கு சென்று மல்லிகாவை பார்த்துக் கொள்கிறார். பணக்கார வீட்டு மருமகளான சத்யா வெயிலில் கஷ்டப்படுவதை பார்த்து மல்லிகாவால் தாங்க முடியவில்லை.

    இதுக்கு பேரு கல்யாணமா? உச்சக்கட்ட கோபத்தில் ’நாம் இருவர் நமக்கு இருவர்’ சரண்யா!

    ஆனால் சத்யா எந்த கஷ்டத்தையும் வெளியில் காட்டிக் கொள்ளாமல் அம்மாவுக்காக  நடிக்கிறார். இப்போது ரசிகர்கள் காத்துக் கொண்டிருப்பது வருண்,  சத்யாவை தேடி வந்து  மீண்டும் வீட்டுக்கு அழைத்து செல்லும் எபிசோடுக்காக தான். மீண்டும் வருண் - சத்யா ஜோடி எப்போது சேர்வார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி