மெளன ராகம் 2 இன்றைய எபிசோடில் பல தடைகளை தாண்டி சக்தியிடம் பேசுகிறார் வருண். இதை பார்த்த பழனி, சக்தியை இழுத்து சென்று விடுகிறார்.
மெளன ராகம் சீரியல் 2 இப்போது பரபரப்பான கதைக்களத்துடன் பயணித்து கொண்டிருக்கிறது. இதுவரை சத்யாவாக நடித்து வந்த சக்தி, தன்னை பற்றிய எல்லா உண்மையையும் சொல்லிவிட்டார். கர்த்திக் கிருஷ்ணா தான் அப்பா என்பதில் தொடங்கி மல்லிகா, ஸ்ருதி, காதம்பரி பற்றி எல்லாம் உண்மைகளையும் சொல்லிவிட்டார். இதனால் மனோகர் குடும்பம், அவர் மீது செம்ம கோபத்தில் உள்ளனர். அதே சமயம், ஷீலாவும், ஸ்ருதியும் சக்தியை பற்றி தப்பு தப்பாக மனோகரிடம் சொல்லி ஏற்றி விடுகின்றனர். ஆனால் கார்த்திக் கிருஷ்ணா, வருணிடம் பேசி இதை பற்றி புரிய வைக்கிறார். சக்தியை பற்றி முழுசாக தெரிந்து கொள்ள குற்றாலம் சென்றார் வருண். அங்கு இருக்கும் பழனிடம் சக்தியை பற்றி கேட்டு தெரிந்து கொண்டார்.
நடிகை நயன்தாராவை தெரியும்.. ஆங்கர் டயானாவை தமிழ் ரசிகர்களுக்கு தெரியுமா?
இப்போது சக்தி - மல்லிகா வருண் மீது கோபத்தில் இருக்கின்றனர். அவர், சக்திக்கு விவாகரத்து நோட்டீஸ் வழங்கி விட்டதாக தப்பாக நினைத்து கொண்டு கோபத்தை காட்டி வருகின்றனர். சக்தியை கையோடு அழைத்து கொண்டு தான் ஊரை விட்டு கிளம்புவேன் என அடம்பிடிக்கிறார் வருண். இதனால் மனோகர் - ஷீலா வந்து கூப்பிட்டும் வருண் சென்னைக்கு செல்லவில்லை. சக்தியின் அத்தை வருண் பக்கம் நிற்கிறார். மாமா பழனியோ வருணை வெறுக்கிறார்.
ஹேமாவுக்கு எல்லா உண்மையும் தெரிஞ்சு போச்சா? பாரதி கண்ணம்மாவில் புது ட்விஸ்ட்!
இப்படி இருக்கையில் இன்றைய எபிசோடில் சக்தியிடம் போய் பேசுகிறார் வருண். குற்றாலம் போனது, அங்கு பழனியிடம் சக்தியை பற்றி கேட்டு தெரிந்து கொண்டது என எல்லா காரணத்தையும் வருண் சொல்ல, சக்தி முகம் மாறுகிறது. அந்த நேரம் பார்த்து பழனி அங்கு வந்து வருணை திட்டிவிட்டு அங்கிருந்து சக்தியை இழுத்து செல்கிறார். அடுத்த சக்தி என முடிவு எடுப்பார்? வருணை ஏற்றுக் கொள்வாரா? என்ற கேள்விகளுக்கு வரும் எபிசோடில் பதில் தெரிந்து விடும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.