Home /News /entertainment /

ஷீலாவின் முகத்திரை கிழிந்தது... மெளன ராகத்தில் இனி சக்தி ஆட்டம்!

ஷீலாவின் முகத்திரை கிழிந்தது... மெளன ராகத்தில் இனி சக்தி ஆட்டம்!

மெளன ராகம்

மெளன ராகம்

ஷீலா, சக்தியை முறைத்தப்படியே வீட்டை விட்டு கிளம்புகிறார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    மெளன ராகம் சீரியலின் பரபரப்பு புரமோ தற்போது வெளியாகியுள்ளது, ஷீலாவின் முகத்திரையை கிழித்து வீட்டை விட்டு வெளியே அனுப்புகிறார் சக்தி.

    மெளன ராகம் சீரியலில் இப்போது பரபரப்பின் உச்சத்தில் சென்று கொண்டிருக்கிறது. இத்தனை ஆண்டுகளாக காதம்பரி, ஸ்ருதிக்கு பயந்து அமைதியாக இருந்த சக்தி இப்போது தைரியமாக பேச தொடங்கி விட்டார். சக்தியின் ரோல் எப்போதுமே சாந்தமாக காட்டப்பட்டு வந்தது, எப்போதுமே அழுதுக் கொண்டு மற்றவர்களுக்கு பயந்து மறைந்து மறைந்து வாழ்ந்து கொண்டிருந்தார். இது ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. அவரின் ரோலை போல்டாக காட்டும்படி தொடர்ந்து கூறி வந்தனர். அது இயக்குனர் காதுக்கு சென்று விட்டது போல கடந்த சில மாதங்களாக சக்தி,  சீரியலில் எல்லோரையும் ஓட விடுகிறார்.

    கல்யாணத்துக்கு முன்னாடி அமீர் - பாவ்னி வாழ்க்கையில் இப்படியொரு நல்ல விஷயமா!

    காதம்பரியை போலீஸில்  பிடித்து கொடுத்ததில் இருந்து, மல்லிகாவை கார்த்திக் உடன் சேர்த்து வைத்தது  வரை எல்லாமே சக்தியின் முடிவுகள் தான். இப்படி இருக்கையில் அடுத்து இத்தனை வருஷமாக ஷீலா செய்து வந்த துரோகத்தையும் சக்தி கண்டுப்பிடித்து விட்டார். ஷீலா, வருணின் மாத்திரைகளை மொத்தமாக கொடுக்காமல் ஏமாற்றியது சக்திக்கு சந்தேகத்தை தந்தது. அதனால் யாருக்கும் தெரியாமல் டாக்டரிடம் இதை பற்றி விசாரித்தார்.

    4 வருட உழைப்பு.. அளவில்லா சந்தோஷத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் குழு!

    டாக்டர், ஷீலா அத்தை கொடுத்து வந்தது தப்பான மாத்திரைகள் என்ற உண்மையை சொல்லிவிட்டார். இத்தனை ஆண்டுகளாக ஷீலா செய்து வரும் துரோகத்தை நினைத்து கலங்கி போகிறார் சக்தி. இதன் தொடர்ச்சியாக இந்த உண்மையை மனோகர் மற்றும் மொத்த குடும்பத்திடமும்  சொல்கிறார். இதுக் குறித்த புரமோ தற்போது வெளியாகியுள்ளது.



    அதாவது சக்தி மனோகர், வருண், தருண், ஸ்ருதி , மனோகரிடம் ஷீலா செய்து வரும் துரோகத்தை சொல்லிவிடுகிறார். கோபத்தில் மனோகர் ஷீலாவை அடித்து வீட்டை விட்டு வெளியே துரத்துகிறார். வருணுக்கு ஷாக் தாங்கல. ஸ்ருதிக்கும் பயம் வந்து விடுகிறது. ஷீலா, சக்தியை முறைத்தப்படியே வீட்டை விட்டு கிளம்புகிறார். புரமோவை பார்த்த ரசிகர்கள் எபிசோடுக்காக ஆவலுடன் வெயிட்டிங்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி