Home /News /entertainment /

உண்மையை சொன்ன சக்தி.. ஸ்ருதி - காதம்பரிக்கு அடுத்த அதிர்ச்சி!

உண்மையை சொன்ன சக்தி.. ஸ்ருதி - காதம்பரிக்கு அடுத்த அதிர்ச்சி!

மெளன ராகம்

மெளன ராகம்

மெளன ராகம் எபிசோடில், ரவுடியின் முடி, முகம், உயரம் என அங்க அடையாளங்களை சக்தி சொல்ல ஸ்ருதி, காதம்பரி, ருக்கு அனைவருக்கும் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி.

    மெளன ராகம் சீரியலின் இன்றைய எபிசோடுக்கான பரபரப்பு புரமோ வெளியாகியுள்ளது. சக்தியை கொலை செய்ய நினைத்த ஸ்ருதி குடும்பத்துக்கு அதிர்ச்சி கொடுக்கிறார் சக்தி.

    நீண்ட இடைவெளிக்கு பிறகு வருணும் சக்தியும் இணைந்து விட்டனர். ஆனால் அந்த சந்தோஷம் கொஞ்சம் நேர கூட நீடிக்கவில்லை. அதற்குள் ஸ்ருதியின் பாட்டி, ருக்கு ஏற்பாடு செய்ய ரவுடி சக்தியை கொலை செய்ய வருகிறார். அதை கார்த்திக் கிருஷ்ணா பார்த்து விடுகிறார். அவர் சக்தியை காப்பாற்ற, ரவுடி தவறுதலாக கார்த்தி கிருஷ்ணாவை குத்தி விடுகிறார். இப்போது அவர் ஆஸ்பிட்டலில் உயிருக்கு போராடி கொண்டிருக்கிறார். வருண்- சக்தி, ஸ்ருதி, தருண், பழனி, சொர்ணம் என அனைவரும் ஆஸ்பிட்டலில் இருக்கின்றனர். சென்னையில் இருந்து கிளம்பி காதம்பரி, ருக்கு, கார்த்திக் கிருஷ்ணா அம்மா எல்லோரும் இப்போது கொடைக்கானல் வந்துள்ளனர்.

    பிரபல சீரியல் நடிகருக்கு காதல் தோல்வி? ஆறுதல் சொன்ன ரசிகர்கள்!

    இந்நிலையில் ருக்கு ஏற்பாடு செய்யத ரவுடி தான் கார்த்திக் கிருஷ்ணாவை கத்தியால் குத்தியது என யாருக்கும் தெரியாது. இப்படி இருக்கையில், இன்றைய எபிசோடில் இந்த வழக்கை விசாரிக்க போலீஸ் ஆஸ்பிட்டல் வருகின்றனர். அப்போது வழக்கம் போல் காதம்பரி , சக்தியை மாட்டிவிட நினைக்கிறார். ஆனால் கார்த்திக்கின் அம்மா சக்திக்கு ஆதரவாக பேசுகிறார். கடைசியில் போலீஸ் ரவுயை நேரில் பார்த்தவர்கள் யார்? என கேட்கிறார்.அதற்கு சக்தி நான் பார்த்தேன் என கூறி , ருக்கு அதிர்ச்சி தருகிறார்.



    அதுமட்டுமில்லை சக்தி, ரவுடியின் முடி, முகம், உயரம் என அங்க அடையாளங்களை சொல்ல ஸ்ருதி, காதம்பரி, ருக்கு அனைவருக்கும் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி. ஒருவேளை சக்தி, அந்த ரவுடியை அடையாளம் காட்டிவிட்டால் இவர்கள் மாட்டிக் கொள்வார்கள். இந்த  பயம் அதிகமாக இருப்பது ருக்குக்கு தான். அவர் ஏற்பாடு செய்ய நபர் தான் அந்த ரவுடி. இதனால் போலீஸிடம்  அந்த ரவுடி மாட்டிவிட கூடாது என மூவரும் நினைக்கின்றனர்.

    ஏற்கெனவே டிஜிபி பேத்தியை கடத்திய விஷயத்தில் ருக்கு தான் மாஸ்டர் பிளான் என்பதை சக்தி கண்டுப்பிடித்துவிட்டார். ஆனால் அது  முதல் முறை என்பதால் மன்னித்துவிட்டார்.ஆனால் இந்த  முறை கார்த்திக் கிருஷ்ணா விஷயத்தில்  அப்படி செய்யமாட்டார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Television, TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி