Home /News /entertainment /

மாட்ட போகிறாரா ஸ்ருதி? மெளன ராகம் சீரியலில் அடுத்த திருப்பம்!

மாட்ட போகிறாரா ஸ்ருதி? மெளன ராகம் சீரியலில் அடுத்த திருப்பம்!

மெளன ராகம்

மெளன ராகம்

மெளன ராகம் 2 சீரியலில் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் முக்கியமான ட்விஸ்டுடன் சீரியல் முடிக்கப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    மெளன ராகம் சீரியலில் இன்றைய எபிசோடில் கார்த்திக் கிருஷ்ணாவை கத்தியால் குத்திய ரவுடியை போலீஸ் பிடித்து விட்டனர்.

    பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் தினம் தினம் புதிய திருப்பத்துடன் ஒளிப்பரப்பாகி வரும் மெளன ராகம் 2 சீரியலில் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் முக்கியமான ட்விஸ்டுடன் சீரியல் முடிக்கப்படுகிறது. இப்போது காதம்பரிக்கு உடம்பு சரியில்லை என்பதால் கார்த்திக் கிருஷ்ணாவை சக்தி,  காதம்பரி வீட்டுக்கு அழைத்து வந்து இருக்கிறார். இவர்களுடன் சொர்ணம் அத்தையும் வந்து இருக்கிறார். வந்த முதல் நாளே ருக்குமணி மீது சொர்ணம் அத்தைக்கு சந்தேகம் வந்து விடுகிறது. அதே போல் சக்தி கண்ணில் கார்த்திக் கிருஷ்ணாவை குத்திய ரவுடியும் மாட்டிக் கொள்கிறார்.

    மகனுடன் முதல் புகைப்படம்.. மகிழ்ச்சியில் ரோஜா சீரியல் அர்ஜூன்!

    இதை பற்றி சக்தி, மனோகரிடம் சொல்கிறார். மனோகர் உடனே போலீஸுக்கு ஃபோன் செய்து இதை பற்றி பேசுகிறார். சக்தி சொன்ன வண்டி நம்பரை வைத்து போலீஸூம் ரவுடியை வலை வீசி தேடுகின்றனர். கடைசியில் ரவுடி போலீஸிடம் மாட்டிக் கொண்டார். இந்த தகவலை போலீசார் மனோகருக்கு ஃபோன் செய்து சொல்கின்றனர். மனோகரும் வீட்டில் இருக்கும் அனைவரிடமும் சொல்கிறார். அப்போது தான் ஸ்ருதிக்கு இவ்வளவு விஷயம் நடந்தது என்பதே தெரிய வருகிறது.

    2வது குழந்தைக்கு தாயாகும் விஜய் டிவி சீரியல் பிரபலம்!

    உடனே அவர் பதற்றத்தில் ருக்குமணிக்கு ஃபோன் செய்கிறார். அப்போது ருக்குமணி, காதம்பரி வீட்டுக்கு ரவுடி வந்தது, பணம் கேட்டு மிரட்டியது என எல்லா கதையும் சொல்கிறார். ஸ்ருதிக்கு அதிர்ச்சி தாங்கவில்லை. அந்த நேரம் பார்த்து தருணும் ரூமூக்கு வந்து விடுகிறார். வீட்டில் இருக்கும் எல்லோரும் போலீஸ் ஸ்டேஷனுக்கு கிளம்புகின்றனர். இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது. ஒருவேளை போலீஸ் பிடித்தது கார்த்திக் கிருஷ்ணாவை குத்திய ரவுடியை தான் என்றால் ஸ்ருதி கையும் களவுமாக மாட்ட போவது உறுதி.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி