முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / மெளன ராகம் சீரியலில் சத்யா - வருணை சேர்த்து வைக்க போவது இவர் தானா?

மெளன ராகம் சீரியலில் சத்யா - வருணை சேர்த்து வைக்க போவது இவர் தானா?

மெளன ராகம்

மெளன ராகம்

மெளன ராகம் சீரியலில் வருண் - சத்யாவுக்கு உதவ போவது இவர் தான்.

  • 1-MIN READ
  • Last Updated :

மெளன ராகம் சீரியலில் அடுத்து வரப்போகும் முக்கியமான ட்விஸ்ட் குறித்த அப்டேட் இணையத்தில் பரவி வருகிறது. வருண் - சத்யாவை சேர்த்து வைக்க போவது யார் தெரியுமா?

சத்யாவின் மாமா பழனி வைத்த போட்டியில் வருண் தோற்று விட்டார். இதனால் அவரை ஊருக்கு போக சொல்கிறார் பழனி. வருண் எவ்வளவு கெஞ்சியும் பழனி மனம் இறங்கவில்லை. வருண் ஊருக்கு போவதை சத்யாவால் தாங்கி கொள்ள முடியவில்லை. இன்றைய எபிசோடில் சத்யா வருணை பார்க்க போகிறார். சத்யாவுக்கும் வருண் மீது காதல் இருக்கிறது. ஆனால் சில காரணங்களால் அதை சொல்லாமல் தவிக்கிறார். வருண், சென்னைக்கு வர சொல்லி சத்யாவிடம் கெஞ்சுகிறார். ஆனால் பழனி மாமா பேச்சை மீற மாட்டேன் என்கிறார் சத்யா.

சரஸ்வதியுடன் மீண்டும் சேர்ந்த வசு.. கடுப்பில் சந்திரகலா!

தருணும் ஸ்ருதியும் சென்னைக்கு கிளம்பலாம் என வருணிடம் சொல்கின்றனர். ஆனால் வருண் கேட்பதாக இல்லை. தனது காதலுக்காக மீண்டும் சத்யா மாமாவிடம் பேச வருகிறார். அதற்குள் சொர்ணம், வருண் - சத்யா பற்றி பேசி பழனி மனதை மாற்றுகிறார். இதனால் மறுபடியும் வந்து வருண் வாய்ப்பு கேட்கும் போது பழனியும் அதை தருகிறார். 30 நிமிடம் தொடர்ந்து சத்யாவுடன் போட்டி போட்டு பாட வேண்டும் என்பது தான் அந்த சவால். வருண் அதை ஏற்றுக் கொள்கிறார். அதன் பின்பு தருணும் ஸ்ருதியும் சென்னைக்கு கிளம்பி சென்று இங்கு நடந்ததை பற்றி மனோகர், ஷீலாவிடம் சொல்கின்றனர். அதுமட்டுமில்லை பழனியின் புதிய சவாலை கேட்டு மனோகர் ஷாக் ஆகுகிறார். சத்யாவுடன் எப்படி வருணால் பாட முடியும் என அனைவரும் யோசிக்கின்றனர்.

மோகன்லால் ரோலில் ரஜினிகாந்த்.. பிருத்வி ராஜ் சொன்ன பளீச் பதில்!

இரவு வருணை தனியாக சந்தித்து பேசும் சத்யா, இந்த போட்டி எல்லாம் வேண்டாம் நீங்கள் ஊருக்கு கிளம்புங்கள் என்கிறார். ஆனால் வருண் அதில் உறுதியாக இருக்கிறார். இந்நிலையில் இணையத்தில் சீரியல் குறித்த அப்டேட் வேகமாக பரவி வருகிறது. அதாவது, வருணுக்கு பாட்டு சொல்லி கொடுத்து இந்த போட்டியில் ஜெயிக்க வைக்க போவது கார்த்திக் கிருஷ்ணா தான் என கூறப்படுகிறது.

தற்போது கார்த்திக் கிருஷ்ணா சென்னை செல்லாமல் தாண்டிகுடியில் தான் இருக்கிறார். அவர் வருணுக்கு உதவி செய்து இருவரையும் சேர்த்து வைக்க போகிறார். இந்த எபிசோடுகளை வரும் வாரத்தில் காணலாம் என தகவல்கள் வேகமாக பரவி வருகின்றன. இது உண்மையா? இல்லையா? என்பது சீரியல் டெலிகாஸ்ட் ஆன பின்பு தான் தெரியும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial, Vijay tv