Home /News /entertainment /

சத்யாவுடன் மீண்டும் சேர போகிறாரா தருண்? மெளன ராகம் 2வில் முக்கிய திருப்பம்!

சத்யாவுடன் மீண்டும் சேர போகிறாரா தருண்? மெளன ராகம் 2வில் முக்கிய திருப்பம்!

மெளன ராகம் 2

மெளன ராகம் 2

மெளன ராகம் 2 வில் மல்லிகா தான் கார்த்திக்கின் முதல் மனைவி என்ற ரகசியத்தை அவர் சொல்லிவிடுகிறார்

    மெளன ராகம் 2 சீரியல் நாளுக்கு நாள் டி.ஆர்பியில் கலக்கி கொண்டிருக்கிறது. அதற்கு முக்கியமான காரணம் சீரியலில் தற்போது அரங்கேறி வரும் அதிரடி திருப்பம் தான்.

    ’சாது மிரண்டால் காடு கொள்ளாது’ கதை போல் தற்போது சத்யா பொங்கியதால் மொத்த குடும்பமும் கலங்கி நிற்கிறது. இவ்வளவு நாளாக அம்மா மல்லிகாவுக்காக அமைதியாக இருந்த சத்யா, தான் சத்யா இல்லை சக்தி என்ற உண்மையை சொல்லிவிட்டார். அதுமட்டுமில்லை கார்த்திக் கிருஷ்ணா தான் தன்னுடைய அப்பா என்றும் அவர் உண்மையை போட்டு உடைத்து விட்டார். இவ்வளவு நாளாக ஸ்ருதி உண்மை தெரிந்தும் நடித்து வந்தார். ஆனால் தற்போது வருண், ஷீலா, தருண், மனோகர் என அனைவரிடம் சத்யா உண்மையை போட்டு உடைக்க அந்த விஷயம் காதம்பரிக்கும் தெரிந்து விட்டது.

    இதையும் படிங்க.. பிக் பாஸ் வருண் - அக்‌ஷராவுக்கு திருமணமா? ஷாக்கான ரசிகர்கள்!

    இன்றைய எபிசோடில் மல்லிகாவை தேடி  காதம்பரி தானக்குடி சென்றுள்ளார். அவருடன் ஷீலாவும், ஸ்ருதியின் பாட்டியும் சென்றுள்ளனர். அங்கே மல்லிகாவிடம் வழக்கம் போல் காதம்பரி பிரச்சனை செய்ய, சத்யா மல்லிகாவை காப்பாற்ற  கத்தி எடுத்து மிரட்டி  காதம்பரியை ஓட வைக்கிறார். இங்கே மனோகர் வீட்டுக்கு போகும் கார்த்திக்கை மனோகர் பயங்கரமாக திட்டி வீட்டை விட்டு வெளியே அனுப்பி விடுகிறார். கார்த்திக் தனது தரப்பு நியாயத்தை சொல்ல மனோகர் இடம் கொடுக்கவில்லை.

    அந்த கவலையுடன் வீட்டுக்கு போகிறார் கார்த்திக். அங்கே அவரின் அம்மாவிடம் நடந்ததை கூறி வறுத்தப்படுகிறார். இப்படி இருக்கையில் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்ப்பது வருண் - சத்யா மீண்டும் சேர்வார்களா? இல்லையா? என்பதற்கு தான். தற்போது இணையத்தில் பரவி வரும் தகவலின் படி அடுத்த வார எபிசோடில் முக்கியமான ட்விஸ்ட் ஒன்று அரங்கேறவுள்ளது.

    இதையும் படிங்க.. 'இதய நாயகன்' டூ 'வெள்ளிவிழா நாயகன்' முரளி பிறந்த நாள் ஸ்பெஷல்!

    அதாவது கார்த்திக்கின் அம்மா, மனோகர் வீட்டுக்கு போய் இதைப்பற்றி பேசுகிறார். ஆரம்பத்தில் கோபத்தில் கத்திய மனோகர், பின்பு பொறுமையாக நடந்ததை கேட்கிறார். அவரிடம் மல்லிகா தான் கார்த்திக்கின் முதல் மனைவி என்ற ரகசியத்தை அவர் சொல்லிவிடுகிறார்   என்ற தகவல் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

    இதை கேட்டு வருணும் ஷாக் ஆகி, பின்பு மனோகர் குடும்பத்தினர் சத்யாவை பார்க்க தானக்குடிக்கு செல்வது போன்ற திருப்பங்கள் அடுத்த வார எபிசோடில் வர உள்ளதாக இணையத்தில் தகவல்கள் உலா வருகின்றன. இது உண்மையா? இல்லையா? என்பது அடுத்த வாரம் தெரிந்து விடும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி