மெளன ராகம் 2 சீரியலில் சத்யாவை சந்திக்க ஊருக்கு கிளம்புகிறார் வருண். இந்த தருணத்திற்காக மொத்த ரசிகர்களும் வெயிட்டிங்.
மெளன ராகம் 2 சீரியலை ரசிகர்கள் அதிகம் விரும்பி பார்க்க 2 காரணம் உள்ளது. ஒன்று சீரியலின் திரைக்கதை மற்றொன்று வருண் - சத்யா லவ் கெமிஸ்ட்ரி. இந்த ஜோடிகளின் காதல் காட்சிகள் இணையத்தில் பயங்கர வைரல். குறிப்பாக இளைஞர்கள் இந்த சீரியலை விரும்பி பார்க்கின்றனர். இந்த நேரத்தில் தான் சத்யாவும் வருணும் பிரியும் படியான பரபரப்பு திருப்பங்கள் சீரியலில் அரங்கேறின. சத்யா மீது சந்தேகப்பட்டு வருண் அவரை ஒதுக்கி வைக்கிறார். சத்யா மீது தப்பு இல்லை என புரிந்து கொண்டு அவருடன் சேர வரும் போது சத்யா பற்றிய அதிரடியான உண்மை தெரிய வருகிறது.
’தென்றல் வந்து என்னை தொடும்’ சீரியல் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்பிரைஸ்!
இதனால் சத்யாவை மீண்டும் பிரியும் நிலை வந்து விடுகிறது. இப்போது சத்யா அவரின் அம்மா மல்லிகாவுடன் தாடிக்குளத்தில் இருக்கிறார். சத்யாவை பற்றி தெரிந்து கொள்ள வருண் அவரின் சொந்த ஊரான குற்றாலத்திற்கு சென்றுள்ளார். அங்கு இருக்கும் சத்யாவின் மாமா பழனி வீட்டில் தான் இப்போது வருண் தங்கி இருக்கிறார். அவர் சத்யா பற்றிய எல்லா கதைகளையும் வருணிடம் சொல்லிவிட்டார். ஆனால் அவர்களுக்கு சத்யாவின் கணவர் தான் வருண் என்பது தெரியாது.
கலைஞர் கலைத்துறை வித்தகர் விருது பெறும் ரஜினிகாந்த்?
இப்படி இருக்கையில் கார்த்திக் கிருஷ்ணா மீடியாவில் மல்லிகா மற்றும் சத்யாவை பற்றி பேட்டி கொடுக்கிறார். அவர்கள் தான் என்னுடைய முதல் குடும்பம் என்றும் சொல்கிறார். இதை பார்த்து காதம்பரி, மனோகர், தருண், ஸ்ருதி, ஆகியோர் ஷாக் ஆகுகின்றனர். இந்த பேட்டியை பழனியும் பார்க்கிறார். அப்போது தான் அவருக்கு சத்யாவும் மல்லிகாவும் தாடிக்குளத்தில் இருப்பவது தெரிய வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உடனே சத்யா, மல்லிகாவை பார்க்க கிளம்புகிறார். அவரை தனது காரில் ஏற்றிக் கொண்டு வருணும் கூடவே செல்கிறார். இப்போது சத்யாவும் வருணும் சந்திக்க போகும் நேரம். இந்த தருணத்திற்காக ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.