• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • விதியின் விளையாட்டு இதுதானா? அனாதையாக நிற்கும் மல்லிகாவை பார்க்கும் கார்த்திக்!

விதியின் விளையாட்டு இதுதானா? அனாதையாக நிற்கும் மல்லிகாவை பார்க்கும் கார்த்திக்!

மெளன ராகம்

மெளன ராகம்

மல்லிகா வீட்டைவிட்டு வெளியே வந்து சொந்த ஊருக்கு புறப்படுகிறாள்.

  • Share this:
    மல்லியாகவும் - கார்த்திக் கிருஷ்ணாவும் சந்திக்கும் இந்த சூழ்நிலையைப் பார்த்தால், விதியின் விளையாட்டா இது? என்று தான் கேட்க தோன்றுகிறது.

    விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் மெளன ராகம் சீரியல் முதல் பாகத்திற்கு கிடைத்த ஏகோபித்த வரவேற்பைத் தொடர்ந்து 2 வது பாகம் ஒளிப்பரப்பட்டு வருகிறது. முதல் பாகத்தில் குழந்தைகளாக இருந்த சக்தியும் ஸ்ருதியும் வளர அவர்களின் காதல் கல்யாணம் என கதை நகர்ந்து கொண்டிருக்கிறது. அம்மா மல்லிகாவுடன் சென்னைக்கு வரும் சக்தி, எதிர்பாராத விதமாக வருணை கல்யாணம் செய்து கொண்டு படும் கஷ்டம் பார்ப்பவர்களையும் அய்யோ பாவம் என சொல்ல வைக்கிறது.

    இவ்வளவு நாளாக அம்மா மல்லிகாவுக்கு தெரியாமல் தாலியை மறைத்து மறைத்து நடித்து கொண்டிருந்த சக்தியை பிரிந்தார் மல்லிகா. இனி, நீ எனக்கு மகள் இல்லை என சக்தியை தூக்கி எறிந்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறினார். சக்தியும், குடும்பத்தில் உள்ள மற்றவர்களும் மல்லிகாவை எவ்வளவோ சமாதானம் செய்ய முயன்றும் பலனில்லை. சக்தி, மல்லிகாவின் காலில் விழுந்து கெஞ்சியும் மல்லிகா வீட்டைவிட்டு வெளியே வந்து சொந்த ஊருக்கு புறப்படுகிறாள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    சொந்தம் யாரும் இல்லாமல் அனாதை போல் உணரும் மல்லிகாவின் நிலைமை சோகத்தை தருகிறது. இந்த நேரத்தில் விதியின் விளையாட்டாக மல்லிகா, கார்த்திக் கிருஷ்ணாவை பார்க்க நேரிடுகிறது. மல்லிகாவின் அண்ணன் முறை உறவினர் அவரை அழைத்துக் கொண்டு காரில் செல்கிறார். அப்போது எதிர்பாராமல் கார்த்திக் கிருஷ்ணா வேறொரு காரில் எதிரில் வருகிறார். அப்போது இரண்டு கார்களும் விபத்தை சந்திக்க கார் டிரைவர், கார்த்திக் கிருஷ்ணாவை திட்டி காரில் இருந்து இறங்க சொல்கிறான்.



    கார்த்திக்கும் கீழே இறங்க, மல்லிகாவும் காரை விட்டு வெளியே வர கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் கழித்து இருவரும் மீண்டும் சந்தித்துக் கொள்கின்றனர். அடுத்து என்ன பேசுவார்கள் என்பது தான் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: