Home /News /entertainment /

சேர போகும் வருண் - சத்யா.. ஸ்ருதிக்கு காத்திருக்கும் மிகப் பெரிய அதிர்ச்சி!

சேர போகும் வருண் - சத்யா.. ஸ்ருதிக்கு காத்திருக்கும் மிகப் பெரிய அதிர்ச்சி!

மெளன ராகம்

மெளன ராகம்

மெளன ராகம் சீரியலில் வருணும் சத்யாவுடன் சேர்ந்து வாழ முடிவு எடுத்து விட்டார்.

    மெளன ராகம் சீரியலில் இந்த வார எபிசோடுக்கான புரமோ வெளியாகியுள்ளது. இதில் ஸ்ருதிக்கு மிகப் பெரிய அதிர்ச்சியை தருகிறார் கார்த்திக் கிருஷ்ணா.

    விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் மெளன ராகம் சீரியல் ஜெட் வேகத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறது. கதைப்படி இப்போது மொத்த குடும்பத்திற்கும் சத்யா பற்றிய உண்மை தெரிந்து விட்டது. அதாவது சத்யாவின் அப்பா கார்த்திக் கிருஷ்ணா என்பதும், அவரின் முதன் மனைவி மல்லிகா என்பதையும் சத்யாவே சொல்லிவிட்டார். இந்த உண்மைகளை சொல்லிவிட்டு ஊருக்கு கிளம்பி விட்டார். இதனால் மனோகர், சத்யா - கார்த்திக் கிருஷ்ணா மீது செம்ம கோபத்தில் இருக்கிறார். இனிமேல் சத்யாவை மருமகளாக ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்கிறார். இப்படி இருக்கையில் சத்யா வாழ்க்கை தன்னால் கெட்டு விட கூடாது என நினைத்த கார்த்திக் கிருஷ்ணா, வருணை அழைத்து மொத்த உண்மையும் சொல்கிறார்.

    பாரதி கண்ணம்மா சீரியல் பிரபலத்திற்கு திருமணம்.. குவியும் வாழ்த்துக்கள்!

    வருணுக்கு சத்யா பற்றி மொத்தமாக தெரிந்து கொள்ள வேண்டும் என தோன்றுகிறது. மனோகரிடம் பொய் சொல்லிவிட்டு குற்றாலம் சென்று இருக்கிறார். அங்கு இருக்கும் சத்யாவின் மாமா பழனியிடம் சத்யாவின் குழந்தை பருவத்தை பற்றி கேட்டு வருகிறார். இது ஒருபுறம் இருக்க, தாண்டிக்குளத்தில் இருக்கும் சத்யா, வருண் நினைவில் தவிக்கிறார். அம்மாவுக்கு உதவியாக டீ எஸ்டேட்டில் வேலையும் செய்கிறார்.

    முடிய போகும் சன் டிவி சூப்பர் ஹிட் சீரியல்? இணையத்தில் பரவும் தகவல்!

    இந்நிலையில் இந்த வார எபிசோடுக்கான புரமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் கார்த்திக் கிருஷ்ணா, மானோகர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்கிறார். அதற்காக வக்கீல் நோட்டீஸும் அனுப்புகிறார். இதை பார்த்த ,மனோகர் கோபத்தில் கத்த, இதை பற்றி விசாரிக்க ஸ்ருதி உடனடியாக கிளம்பி வீட்டுக்கு வருகிறார். அங்கு வரும் ஸ்ருதிக்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்துக் கொண்டிருக்கிறது.



    இனிமேல் சத்யா -மல்லிகாவை  பிரிய மாட்டேன் என்று கூறிவிட்டு அவர்களுடன் சேர்ந்து வாழ கார்த்திக் ஊருக்கு கிளம்புகிறார். இதை பார்த்த காதம்பரி அதிர்ச்சியில் உறைந்து போகிறார். வருணும் சத்யாவுடன் சேர்ந்து வாழ முடிவு எடுத்து விட்டார். இதனால் ஸ்ருதிக்கு அதிர்ச்சிக்கு மேல்  அதிர்ச்சி காத்துக் கொண்டிருக்கிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி