முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / மெளன ராகம் 2 இறுதி நாள் படப்பிடிப்பு... கவனம் பெறும் படம்!

மெளன ராகம் 2 இறுதி நாள் படப்பிடிப்பு... கவனம் பெறும் படம்!

மெளன ராகம் 2

மெளன ராகம் 2

மௌன ராகம் 2, மலையாள தொலைக்காட்சி தொடரான 'வானம்பாடி'யின் ரீமேக்காகும்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

மெளனராகம் 2 சீரியலின் இறுதி நாள் படப்பிடிப்பில் எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

விஜய் டிவி தொடரான மௌன ராகம் 2 சிறப்பான க்ளைமேக்ஸுடன் தனது பயணத்தை விரைவில் முடிக்கவுள்ளது. அதாவது மார்ச் 4-ஆம் தேதி இதன் இறுதி ஒளிபரப்பு இருக்கும் எனக் கூறப்படுகிறது.

பிப்ரவரி 2021-ல் தொடங்கிய இந்த சீரியல் 560 எபிசோட்களுக்கு மேல் ஒளிபரப்பான நிலையில், தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இது மௌன ராகம் சீசன் 1-ன் தொடர்ச்சியாகும்.

மௌன ராகம் 2, மலையாள தொலைக்காட்சி தொடரான 'வானம்பாடி'யின் ரீமேக்காகும். இது முதல் சீசனைப் போலவே குறுகிய காலத்தில், பார்வையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. மௌன ராகம் 2-ல் சல்மானுல் ஃபாரிஸ், ரவீனா தாஹா, ராகுல் ராமச்சந்திரன் மற்றும் ஷில்பா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் சிப்பி ரஞ்சித், அனுஸ்ரீ செம்பகச்சேரி, திவ்யா பினு, மஞ்சுளா, அஞ்சலி தேவி, கைலாஷ் நாத், சீமா ஜி நாயர், ஆனந்த் பாபு மற்றும் ரேஷ்மா நந்து ஆகியோர் துணைக் கதாபாத்திரங்களில் நடித்து பாராட்டுகளைப் பெற்றனர்.

இன்னும் திருமணம் செய்துக் கொள்ளாத 90’ஸ் நடிகைகள்!

இந்நிலையில் மெளனராகம் 2 இறுதி நாள் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. சீரியல் முடிவடைவதால் சோகத்தில் இருக்கிறார்கள் அதன் ரசிகர்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial, Vijay tv