முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / அண்ணனுக்கு முடியாத போது, இது இப்ப தேவையா? பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவுக்கு வந்த சோதனை!

அண்ணனுக்கு முடியாத போது, இது இப்ப தேவையா? பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவுக்கு வந்த சோதனை!

பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவா

பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவா

பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவா தனது மனைவி மற்றும் மகளுடன் மாலத்தீவுக்கு விடுமுறையை கழிக்க சென்றார்.

  • Last Updated :

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜீவாவாக நடிக்கும் நடிகர் வெங்கட் மாலத்தீவில் விடுமுறையை கழிக்க சென்றுள்ளார். அங்கு அவர் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜீவாவாக நடிக்கும் வெங்கடேஷ் ரங்கநாதன் சின்னத்திரை ரசிகர்களுக்கு பரீட்சையமானவர். சன் மியூசிக்கில் ஆங்கராக தனது பயணத்தை அவர் தொடங்கிய காலத்தில் இருந்தே அவர் மீது ரசிகர்களுக்கு பெரிய அன்பு. மிகவும் பொறுமையாக பேசக்கூடிய வெங்கட், 90ஸ் கிட்ஸ்களுக்கு பிடித்தமான ஆங்கராக இருந்து இருக்கிறார். குறிப்பாக பெண் ரசிகைகள் இவருக்கு ஏராளம். ஆங்கரிங்கில் இருந்து விலகி வந்து சீரியல்களில் கவனம் செலுத்த தொடங்கினார்.

கோவிலுக்கு வந்த இடத்தில் சீரியல் கதை.. சினேகா - சங்கீதா - சரண்யா கொடுத்த ஷாக்!

பாண்டியன் ஸ்டோர்ஸ், ரோஜா சீரியல் இவருக்கு நல்ல ரீச்சை வாங்கி தந்தது. அதன் பின்பு ரோஜா சீரியலில் இருந்து விலகியவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மட்டும் இப்போது கவனம் செலுத்தி வருகிறார். இப்படி இருக்கையில் சீரியல் கதையில் ஜீவாவின் அண்ணன் மூர்த்திக்கு நெஞ்சுவலி. ஆப்ரேஷன் முடித்து விட்டு வீட்டுக்கு திரும்பியவர் ஓய்வு எடுத்து வருகிறார். இது சீரியலில் அரங்கேறும் சம்பவம், ஆனால் ரசிகர்கள் இந்த கதையை வெங்கட் போன பிக்னிக் வரை எடுத்து சென்று விட்டனர்.


வெங்கட் சில தினங்களுக்கு முன்பு தனது மனைவி மற்றும் மகளுடன் மாலத்தீவுக்கு விடுமுறையை கழிக்க சென்றார். விடுமுறை மட்டுமில்லை அவரின் 11வது வருட திருமண நாளும் கூட. குடும்பத்துடன் இந்த மகிழ்ச்சியான நாளை கொண்டாடியவர் அங்கே எடுத்து கொண்ட புகைப்படங்களையும் இன்ஸ்டாவில் ஷேர் செய்து இருந்தார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் லைக்ஸ் போட்ட கையோடு கமெண்ட் செக்‌ஷனில் புகுந்து விளையாட தொடங்கினர்.


”அங்கே  மூர்த்தி அண்ணே நெஞ்சு வலியில் இருக்கிறார், உங்களுக்கு மாலத்தீவில் பிக்னிக் கேட்குதா” என தொடங்கியவர்கள் தொடர்ந்து இதுத் தொடர்பான கமெண்டுகளை பதிவு செய்து வெங்கட்டை அதகளம் செய்தனர். கண்டிப்பாக இந்த கமெண்டுகளை பார்த்து வெங்கட் வாய் விட்டு சிரித்து இருப்பார் என தெரிகிறது. அதுமட்டுமில்லை பாண்டியன் ஸ்டோர்ஸ்  சீரியல் அவர்களின் வாழ்வோடு எவ்வளவு கலந்து விட்டது என்பதையும் ஜீவா இடத்தில் இருந்து  புரிந்து கொண்டு  இருப்பார் வெங்கட்.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: Pandian Stores, TV Serial, Vijay tv