• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Bigg Boss Tamil 5: பிக்பாஸில் ஸ்ருதி, அக்‌ஷரா..!

Bigg Boss Tamil 5: பிக்பாஸில் ஸ்ருதி, அக்‌ஷரா..!

பிக் பாஸ் கமல்

பிக் பாஸ் கமல்

ஸ்ருதி இங்கே என்றால் அக்‌ஷரா எங்கே எனக் கேட்கிறீர்களா? என்றவாறு அக்‌ஷராவை மேடைக்கு அழைத்தார் கமல்.

  • Share this:
    பிக் பாஸ் சீசன் 5-ல் சுருதி, அக்‌ஷரா ரெட்டி என இரு மாடல்கள் பங்கேற்றுள்ளனர்.

    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் அனைத்தும் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெறும். அதில் பிக் பாஸ் நிகழ்ச்சி முக்கியமானது. கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் இது எப்போதும் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெறும். எப்போதும் ஜூன் மாத இறுதியில் தொடங்கும் பிக் பாஸ் கடந்த வருடம் கொரோனா தொற்றால் தாமதமாக தொடங்கியது.

    இந்த வருடம் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், தற்போது பிக் பாஸ் 5 நிகழ்ச்சி பிரமாண்டமாக தொடங்கியுள்ளது. முதலில் வீட்டை சுற்றிக் காட்டிய கமல் பின்னர் போட்டியாளர்களை அறிமுகப்படுத்தி வருகிறார்.

    இந்நிலையில் மாடல் சுருதியை பிக் பாஸ் மேடையில் அறிமுகப்படுத்தினார் நடிகர் கமல் ஹாசன். ஸ்ருதி இங்கே என்றால் அக்‌ஷரா எங்கே எனக் கேட்கிறீர்களா? என்றவாறு மற்றொரு மாடல் அக்‌ஷரா ரெட்டியை மேடைக்கு அழைத்தார்.





    சாமானியர்களுக்கு புரியும் படி மாடல் என்றால் என்ன என்பதை விளக்கிய கமல், அவர்களை ரேம்ப் வாக் செய்துக் காட்டச் சொல்லி, பின்னர் பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைத்தார். ஏற்கனவே 3 மாடல்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்க, தற்போது அது 5 ஆக உயர்ந்திருக்கிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: